காபி ஸ்க்ரப் பயன்படுத்தியது உண்டா?

ஒருவரின் நாளை துவங்க காபி மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது

एनडीटीवी फूड डेस्क  |  Updated: December 14, 2018 11:24 IST

Reddit
Winter Care: Try These 5 DIY Coffee Scrubs For Soft And Supple Skin

ஒருவரின் நாளை துவங்க காபி மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. காபி உங்களை எப்படி உற்சாகமாக வைத்து கொள்கிறதோ அதேபோல காபியை கொண்டு உங்கள் அழகையும் அதிகரிக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? காபியை கொண்டு முகத்திற்கு ஸ்க்ரப் செய்யும்போது முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, பொலிவாகவும் மென்மையாகவும் மாறிவிடும். மேலும் சருமத்தை இறுக செய்யும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், சுருக்கம், சூரிய கதிரால் ஏற்பட்ட கருமை நிறம் ஆகியவை அகன்று முகம் பிரகாசிக்கும்.

காபி பட்டை ஸ்க்ரப்
காபி தூள் மற்றும் பட்டை பொடி இரண்டையும் கலந்து முகத்தில் ஸ்க்ரப் செய்து வந்தால் இறந்த செல்கள் அகன்று முகம் பிரகாசமாகும். காபி முகத்தில் அதிகபடியாக சுரக்கும் எண்ணெய் பிசுக்கை குறைக்கும். பட்டை தூள் சருமத்தில் நோய் தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.
 

cinnamon

 

தேவையானவை
காபி தூள் – ஒரு கப்
பட்டை பொடி – 2 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் – 3 தேக்கரண்டி
சர்க்கரை – ஒரு கப்

செய்முறை
ஒரு பௌலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கி கொள்ளவும். அதில் காபி தூள், பட்டை தூள் இரண்டையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதனை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்த கொண்டு வாரத்தில் மூன்று முறை உடலுக்கு ஸ்க்ரப் செய்து கொள்ளலாம்.

காபி ரோஸ் வாட்டர் ஃபேஸ் ஸ்க்ரப்
ரோஸ் வாட்டரில் நிறைய நன்மைகள் உண்டு. சருமத்தில் பிரச்சனைகளுக்கான தீர்வாக இருக்கும் இந்த ரோஸ் வாட்டர். இது சருமத்திற்கு சிறந்த க்ளென்ஸராக செயல்படும். சருமத்தில் உள்ள துளைகளை சுத்தம் செய்யும்.
 

rose water

 

தேவையானவை
காபி தூள் – ஒரு கப்
ரோஸ் வாட்டர் – 2 தேக்கரண்டி

செய்முறை
ஒரு பௌலில் காபி தூள் மற்றும் ரோஸ் வாட்டர் இரண்டியும் சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை முகம் மற்றும் உடல் முழுவதும் மசாஜ் செய்யவும். 20 நிமிடங்கள் கழித்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும்.

காபி கற்றாலை ஸ்க்ரப்
எல்லாவகை சருமத்திற்கும் சிறந்தது கற்றாலை. இதில் வைட்டமின் சி, ஈ, பீட்டா கெரோட்டின் போன்றவை நிறைந்திருக்கிறது. இது உங்கள் சருமத்தில் ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். மேலும் இளமை தோற்றத்தை தக்கவைக்கும்.
 

aloe vera

 

தேவையானவை
காபி தூள் – ஒரு கப்
கற்றாலை ஜெல் – 5 தேக்கரண்டி

செய்முறை
ஒரு பௌலில் காபி தூள் மற்றும் கற்றாலை ஜெல் இரண்டையும் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை கொண்டு முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். 15 நிமிடங்கள் மசாஜ் செய்ததும் பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவி விட வேண்டும்.

காபி தேன் ஸ்க்ரப்
வறண்ட சருமத்தை மென்மையாக்கும் தன்மை தேனிற்கு உண்டு. முகத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். தேனில் ஆண்டிபாக்டீரியல் தன்மை இருப்பதால் சருமத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.
 

honey 650

 

தேவையானவை
காபி தூள் – 4 தேக்கரண்டி
பால் – 1 கப்
தேன் – 2 தேக்கரண்டி

செய்முறை
ஒரு பௌலில் காபி தூள், பால் மற்றும் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். முகம் மற்றும் உடல் முழுவதிலும் தேய்த்து பின் குளிக்கலாம். 10 முதல் 15 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவலாம்.

காபி ஷியா பட்டர் ஸ்க்ரப்
ஷியா பட்டர் சருமத்தை சிறப்பாக வைத்திருக்கும். மேலும் இதில் வைட்டமின் ஏ, ஈ, எஃப் மற்றும் ஃபேட்டி ஆசிட்கள் நிறைந்திருக்கிறது. UV கதிர்களால் ஏற்படும் சரும பிரச்சனைகளை சரி செய்துவிடும்.
 

ub8oaqjo

 

தேவையானவை
காபி தூள் – 4 தேக்கரண்டி
ஷியா பட்டர் – 4 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி

செய்முறை
ஒரு பௌலில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பின் ஷியா பட்டர் மற்றும் காபி தூள் சேர்த்து நன்கு கலந்து உடல் மற்றும் முகத்தில் தடவி குளிப்பதற்கு முன் மசாஜ் செய்யவும். 10 முதல் 15 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவிவிடவும்.
 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement