மழைக்காலத்திற்கு ஏற்ற ஸ்பெஷல் சாலட்

மழைக்காலத்திற்கு ஏற்றபடி வீட்டிலேயே ருசியான சாலட் வகைகளை செய்யலாம்

Sarika Rana  |  Updated: July 25, 2018 22:11 IST

Reddit
Try These 8 Monsoon Special Salads To Treat Your Palates This Rainy Season

மழைக்காலத்தில் எளிதாக உடல் நலம் கெடும். எனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும்.  வறுத்த உணவு வகைகளை அதிமாக சாப்பிடுவதை குறைத்து கொண்டு, காய்கறி மற்றும் ஃப்ரூட் சாலட் வகைகளை அதிகமாக சாப்பிட வேண்டும். இதோ உங்களுக்காக சில சாலட் ஐடியாஸ். 

வெள்ளரி சாலட்

தயிர், சீரகம், வெங்காயம், மாதுளை, கொத்தமல்லி, ஆகியவற்றை சேர்த்து வெள்ளரி சால்ட் செய்யலாம். இதனை சாப்பிட்டுவிட்டு 30 நிமிடம் கழித்து, சூடாக ஒரு கப் டீ குடித்தால், உடல் புத்துணர்ச்சி அடையும்
 

poak8vgo

மிளகு, ஆலிவ் சாலட்

உடல் ஆரோக்கியத்திற்கு ஆலிவ் சிறந்தது. ஆலிவ், மிளகு, குடை மிளகாய், வெள்ளரி, எலுமிச்சை சாறு, பூண்டு, ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து கிரீக் முறையில் சால்ட் தயாரிக்கலாம். இது உடலுக்கு ஆரோக்கியமானது.

3mo7il18

முளைக்கட்டிய பயறு மற்றும் சோள சாலட்

முளைக்கட்டிய பயறு, வேகவைத்த சோளம்,சீரக பொடி, மாதுளை ஆகியவற்றை சேர்த்து சாலட் செய்யலாம். இதனுடன் கொத்தமல்லி சட்னி சுவையானதாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். 

kjl43cc

தக்காளி ஆலிவ் சாலட்

இந்த சாலட் வகையை எளிதாக செய்யலாம். கருப்பு ஆலிவ், வெங்காயம், மிளகு ஆகியவற்றை சேர்த்து இந்த சாலட்டை தயாரிக்கலாம். கூடுதல் சுவைக்கு, வினிகர், சாட் மசாலா சேர்த்து கலக்கவும்

vsodn5eg

வெள்ளரி, வேர்க்கடலை சாலட்

மராத்தி மொழியில் கக்டி என அழைக்கப்படும் இந்த சாலட்டில் வெள்ளரி, வேர்க்கடலை, தேங்காய், எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்க்கப் படுகின்றன. 

bc5trmr8

கரீபியன் ரைஸ் சாலட்

வேகவைத்த அரிசி, அன்னாசி பழம், முந்திரி, வெங்காயம், மிளகு ஆகியவற்றை சேர்த்து கரீபியன் சாலட் தயாரிக்கலாம்.  

rice salad

காளான், குடைமிளகாய் சாலட்

காளான், குடைமிளகாய், க்ரீமி சாஸ் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த சாலட், மிகவும் சுவையானது. மழை காலத்திற்கு ஏற்ற உணவும் கூட.
 

mushroom

உருளை கிழங்கு தயிர் சாலட்

Listen to the latest songs, only on JioSaavn.com

வேகவைத்த உருளை கிழங்கு, தயிர், வெங்காயம், அன்னாசிப் பழம், ஆகியவற்றை சேர்த்து இந்த சாலட்டைத் தயாரிக்கலாம்.

l9djvc98

மழைக்காலத்திற்கு ஏற்ற இந்த சாலட் வகைகளை ருசித்து மகிழுங்கள்.

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement