புரதம் நிறைந்த சிக்கன் ரெசிபிகளை ட்ரை பண்ணுங்க!!

கொலஸ்ட்ராலை குறைத்து, ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக சிக்கனை தயார் செய்ய சில எளிய குறிப்புகளை உங்களுக்காக பரிந்துரைக்கிறோம்.  

Translated by: Kamala Thavanidhi  |  Updated: June 03, 2019 16:33 IST

Reddit
Weight Loss: Try These Three High Protein Grilled Chicken Recipes To Shed A Few Pounds 
Highlights
  • உடல் எடை குறைக்க சிக்கன் ரெசிபிகளை சாப்பிடலாம்.
  • க்ரில் சிக்கனை சாப்பிடும்போது அதன் சத்துக்கள் அப்படியே கிடைக்கும்.
  • காய்கறிகளை கூட சிக்கனுடன் சேர்த்து சாப்பிடலாம்.

அசைவ பிரியர்களுக்கு சிக்கன் ரெசிபிகளை தவிர்க்க முடியாது.  சிக்கனின் ருசிக்கு அடிமையாகி போயிருப்பார்கள்.  உடல் எடை குறைக்கவும் சிக்கன் ரெசிபிகளை சாப்பிடலாம்.  கொலஸ்ட்ராலை குறைத்து, ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக சிக்கனை தயார் செய்ய சில எளிய குறிப்புகளை உங்களுக்காக பரிந்துரைக்கிறோம்.  சிக்கன் டேங்க்ரி:

இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவற்றுடன் சிக்கன் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த ரெசிபி ஆரோக்கியமாகவும் ருசியாகவும் இருக்கும்.  அரைத்த மசாலாக்களை சிக்கனில் தடவி சமைப்பதாலே சிக்கன் மிகவும் மென்மையாக இருக்கும்.  இதனை இரவு உணவிற்கு சாப்பிடலாம்.  chicken tangri

 

க்ரில்டு மிண்டி சிக்கன் வித் வெஜ் சாலட்:

கலோரிகள் குறைவான ரெசிபி இது.  ஆலிவ் எண்ணெய், புதினா மற்றும் எலுமிச்சை சாறு கொண்டு சிக்கனை ஊறவைத்து சமைக்கலாம்.  இது உங்கள் பசியை போக்கி உடலுக்கு தேவையான சத்துக்களை கொடுக்கிறது.  

grilled chicken salad

 

க்ரில்டு சிக்கன் வித் க்ரான்பெர்ரி மசாலா:

க்ரான்பெர்ரி மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து அரைத்து அந்த மசாலாவை போன்லெஸ் சிக்கனில் தடவி க்ரில்டு சிக்கன் அல்லது சிக்கன் டிக்காவாக செய்து அசத்தலாம்.  

3j44tdagஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement