சாண்ட்விச்சை ஆரோக்கியமானதாக்க சில வழிகள்!!

சாண்ட்விச்சில் பனீர் அல்லது காட்டேஜ் சீஸ் போன்றவற்றை சேர்த்து செய்தால் அதில் புரத சத்து அதிகமாக இருக்கும். 

Translated by: Kamala Thavanidhi  |  Updated: August 22, 2019 16:20 IST

Reddit
Cooking Tips: Try This 4-Ingredient Healthy Protein-Rich Sandwich With A Spicy Twist
Highlights
  • சாண்ட்விச்சில் பனீர் சேர்த்து செய்யலாம்.
  • ஹங் கர்டு சேர்க்கப்படுவதால் க்ரீமியாக இருக்கும்.
  • இந்த சாண்ட்விச்சில் புரதம் அதிகமாக இருக்கிறது.

சிக்கன் மற்றும் காய்கறிகள் சேர்த்து சாண்ட்விச் செய்து சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான ஆரோக்கியம் கிடைக்கிறது.  சாண்ட்விச்சில் உங்களுக்கு பிடித்தவற்றை சேர்த்து சாப்பிடலாம்.  வழக்கமான பொருட்களை வைத்து சாண்ட்விச் செய்து அலுத்துவிட்டவர்கள் வித்தியாசமான சாண்ட்விச் ரெசிபிகளை செய்து சாப்பிடலாம்.   

 

e8btjmdo

 
 

சாண்ட்விச்சில் பனீர் அல்லது காட்டேஜ் சீஸ் போன்றவற்றை சேர்த்து செய்தால் அதில் புரத சத்து அதிகமாக இருக்கும்.  ஹங் கர்டு ரெசிபிக்கு ருசியை அதிகரிக்கவும், ஊட்டச்சத்துக்களை அதிகரிக்கவும் செய்யும்.  இதில் ப்ரோபையோடிக் தன்மை அதிகமாக இருக்கிறது.  

தேவையானவை: 

ப்ரெட் ஸ்லைஸ் - 4 

பனீர் -200 கிராம் 

ஹங் கர்டு - 1 கப் 

சேஷ்வான் சாஸ் - 2 மேஜைக்கரண்டி 

செய்முறை: 

ஒரு பௌலில் பனீரை உதிர்த்து போடவும்.  அத்துடன் ஹங் கர்டு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.  

இவை இரண்டையும் நன்கு கலந்து கொள்வதால் அதன் தன்மை மிருதுவாகவும் க்ரீமியாகவும் மாறும்.  

பின் அதில் சேஷ்வான் சாஸ் சேர்த்து கலந்து கொள்ளவும்.  

ப்ரெட் ஸ்லைஸ் எடுத்து அதில் கலந்து வைத்துள்ள கலவையை ப்ரெட்டில் தடவி மற்றொரு ப்ரெட் ஸ்லைஸை வைக்கவும். 

பின் இந்த சாண்ட்விச்சை தவாவில் டோஸ்ட் செய்து எடுத்து பரிமாறவும்.  

உங்களுக்கு மசாலா சுவை குறைவாக வேண்டுமென நினைத்தால் சேஷ்வான் சாஸை குறைவாக பயன்படுத்தலாம்.  

Listen to the latest songs, only on JioSaavn.com

 Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement