அதிக புரதம், அதிக நார்ச்சத்து!!! தொப்பையை குறைக்க எளிமையான உணவு!!!

வைட்டமின் சி, நார்ச்சத்து, பீட்டா கெரட்டின் ஆகியவை இருப்பதால் உடலில் இரத்த சர்க்கரையை சீராக வைக்கிறது. 

Edited by: Kamala Thavanidhi  |  Updated: April 30, 2019 12:32 IST

Reddit
Weight Loss Diet: Try This High Protein And Fibre-Rich Lunch Recipe To Shed Belly Fat
Highlights
  • புரதம் மற்றும் நார்ச்சத்து சேர்த்து கொண்டால் உடல் எடை குறையும்.
  • புரதம் நிறைந்த உணவை சாப்பிடுவதால் பசி உணர்வில்லாமல் இருக்கலாம்.
  • தினையில் புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது.

உடல் எடை குறைக்க ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை சம அளவு சாப்பிடுவதே சிறந்தது.  குறிப்பாக உங்கள் உணவில் புரதம் மற்றும் நார்ச்சத்து இருக்க வேண்டும்.  நார்ச்சத்து செரிமானத்தை சீராக்கி மலச்சிக்கல் பிரச்னையை சரிசெய்கிறது.  புரதம் உடலுக்கு ஆற்றலை கொடுக்கிறது.  தினையில் நார்ச்சத்து மற்றும் புரதம் அதிகம் இருக்கிறது.  உங்கள் மதிய உணவில் தினை சேர்த்து கொண்டால் எளிதில் உடல் எடையை குறைக்கலாம்.  தினையுடன் சில காய்கறிகளும் சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.  அது மேலும் உடலுக்கு வலிமையை சேர்க்கும். உடல் எடை குறைக்கும் தினை:

தினையில் ஏராளமான நன்மைகள் உள்ளது.  புரதம், அமினோ அமிலம், லைசின் ஆகியவை இருக்கிறது.  இவை திசுக்களின் வளர்ச்சிக்கும் பராமரிப்பிற்கும் பயன்படுகிறது.  அசைவ பிரியர்களுக்கு புரதம் எளிதில் கிடைத்துவிடும்.  ஆனால் சைவ பிரியர்கள் தங்கள் உணவில் புரதத்தை சேர்த்து கொள்ள சற்று மெனக்கெட வேண்டிய அவசியம் உண்டு.  மற்ற தானியங்களோடு ஒப்பிடும்போது தினையில் இரண்டு மடங்கு நார்ச்சத்து இருக்கிறது.  இது குடல் இயக்கங்களை சரிசெய்து, மலச்சிக்கலை போக்குகிறது.  தினையுடன் காய்கறிகள் சேர்த்து செய்தால் முழு ஆரோக்கியமும் கிடைக்கும். 

Comments
2h7v8hf8 சூச்சினி, குடைமிளகாய், வெங்காயம், மஞ்சள் மிளகாய், ஆலிவ், பீன்ஸ் ஆகியவை சேர்த்து செய்யலாம்.  இது உடலில் மெட்டபாலிஸத்தை அதிகரிக்கிறது.  வைட்டமின் சி, நார்ச்சத்து, பீட்டா கெரட்டின் ஆகியவை இருப்பதால் உடலில் இரத்த சர்க்கரையை சீராக வைக்கிறது.  மாங்கனீஸ் இருப்பதால் உடலில் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்டை அப்படியே எடுத்து கொள்ள செய்து, கொழுப்பை கரைக்க உதவுகிறது.  மதிய உணவிற்கு அடிக்கடி தினை மற்றும் காய்கறிகள் சேர்த்து கொண்டால் உடல் எடை குறையும். 


உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement