மஞ்சள் மற்றும் கருமிளகு இணைந்தால் இவ்வளவு நன்மைகளா..! வியக்கவைக்கும் சக்திவாய்ந்த சேர்க்கை..

மஞ்சள் மற்றும் கருமிளகு இரண்டையும் ஒன்றாக இணைக்கும்போது, உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது. இந்த கலவை உங்களுக்கு வழங்கக்கூடிய சில ஆரோக்கிய நன்மைகள் இங்கே.

Translated by: Ragavan Paramasivam  |  Updated: January 31, 2020 17:17 IST

Reddit
Turmeric And Black Pepper: This Powerful Combination Can Offer These Surprising Health Benefits

மஞ்சள் மற்றும் கருப்பு மிளகு இணைந்தால் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்க முடியும்

Highlights
  • மஞ்சள் மற்றும் கருப்பு மிளகு மருத்துவ குணங்களால் நிரப்பப்பட்டுள்ளன
  • வீக்கத்துக்கு இந்த இரண்டு மசாலாப் பொருட்களின் கலவையை பயன்படுத்தலாம்.
  • மஞ்சள் மற்றும் கருமிளகின் பல ஆரோக்கிய நன்மைகளை அறிந்து கொள்ளுங்கள்

உங்கள் சமையலறையில் இருக்கும் சில மசாலாப் பொருட்களில் மருத்துவ குணங்கள் மற்றும் சுகாதார நன்மைகள் அதிகம் உள்ளது. உங்கள் உணவில் கூடுதல் சுவையைச் சேர்க்கப் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்கள் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளையும் எதிர்த்துப் போராட உதவும். மஞ்சள், இந்திய உணவுகளை தயாரிக்கும் போது பொதுவாக பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்களில் ஒன்றாகும். இந்த அற்புதமான மசாலா பல மருத்துவ பண்புகளைக் கொண்டுள்ளது. இயற்கையாகவே பல்வேறு சுகாதார பிரச்சினைகளுக்கு எதிராக மஞ்சள் பயன்படுத்தவும் ஆயுர்வேதம் அறிவுறுத்துகிறது.

இதேபோல், கருப்பு மிளகு மற்றொரு பொதுவான மசாலா ஆகும், இது உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும். மஞ்சள் மற்றும் கருமிளகு இரண்டையும் ஒன்றாக இணைக்கும்போது, உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது. இந்த கலவை உங்களுக்கு வழங்கக்கூடிய சில ஆரோக்கிய நன்மைகள் இங்கே.

மஞ்சள் மற்றும் மிளகு : இந்த கலவையின் ஆரோக்கிய நன்மைகள்

1. குர்குமின் சிறப்பாக உறிஞ்சுதல்...

குர்குமின் (Curcumin) என்பது மஞ்சளின் முக்கிய கலவை ஆகும், இது மிகவும் செயல்பாடு உள்ள பொருளாகும். மஞ்சள் வழங்கும் மிகுந்த ஆரோக்கிய நன்மைகளுக்கு இதுதான் பொறுப்பாகும். மறுபுறம், கருப்பு மிளகில் பைப்பரின் (Piperine) உள்ளது. குர்குமினை சிறப்பாக உறிஞ்சுவதற்கு பைபரின் உதவுகிறது. இந்த இரண்டையும் இணைப்பது உங்கள் உடலுக்கு போதுமான அளவு குர்குமின் பெற உதவும்.

fqcvthvமஞ்சள் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை எதிர்த்துப் போராட உதவும்

Photo Credit: iStock

Also read: Turmeric Milk: Reasons Why You Should Be Drinking Golden Milk; Method To Prepare It

2. வீக்கத்திற்கு ஒரு சக்திவாய்ந்த தீர்வு

மஞ்சள் மற்றும் கருப்பு மிளகு இரண்டும் அழற்சி எதிர்ப்பு பண்புகளால் நிரப்பப்பட்டுள்ளது. இந்த இரண்டையும் இணைக்கும்போது, ​​இந்த கலவையில் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. பொதுவாக குளிர்காலத்தில் அழற்சி அதிகரிக்கும். குளிர்காலத்தில் இதை உட்கொள்ளலாம். ஆய்வுகள் படி, இது கீல்வாதத்தின் (arthritis) அறிகுறிகளைத் தடுக்கவும் உதவும்.

3. செரிமானத்தை அதிகரிக்கும்

இந்த கலவை செரிமானத்தை அதிகரிக்க உதவும். இரண்டு மசாலாப் பொருட்களும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். சிறந்த செரிமானத்திற்கு மஞ்சள் மற்றும் கருப்பு மிளகு பயன்படுத்துவதையும் ஆய்வுகள் எடுத்துரைத்துள்ளன. இந்த கலவையை சிறிய அளவில் உட்கொள்வது உங்களுக்கு நல்ல குடல் ஆரோக்கியத்தையும் மேம்பட்ட செரிமானத்தையும் தரும்.

950p6rtமஞ்சள் மற்றும் கருப்பு மிளகு செரிமானத்தை அதிகரிக்க உதவும்

Photo Credit: iStockAlso read: Gut Health: 4 Simple Dietary Changes To Improve Your Gut Health

மஞ்சள் மற்றும் கருப்பு மிளகு பயன்படுத்துவது எப்படி..?

இந்த கலவையை நீங்கள் அதிக அளவில் உட்கொள்ளக்கூடாது. ஒரு சிறிய தொகையை மட்டும் பயன்படுத்துங்கள். நீங்கள் இதை பல்வேறு உணவுகள் அல்லது பானங்கள் மற்றும் ஸ்மூத்திஸ்களில் சேர்க்கலாம். இது சாலட் அல்லது பொரியல்களிலும் தெளிக்கப்படலாம்.

Listen to the latest songs, only on JioSaavn.com

Also read: Diabetes: Turmeric Can Help You Control Blood Sugar Levels; Here's Is The Right Method To Use It

Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement