ப்ளாக் கரன்ட் பழத்தை இரண்டு வகையில் டயட்டில் சேர்க்கலாம்!!

ப்ளாக் கரன்ட் பழத்தில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் இருக்கிறது. வீட்டிலேயே செய்யக்கூடிய டெசர்ட் ரெசிபிகளில் இதனை சேர்த்து சாப்பிட்டு வரலாம்.  

  |  Updated: September 24, 2019 16:24 IST

Reddit
Two Ways Of Using Black Currant Fruit In Your Diet For A Sweet And Sour Treat
Highlights
  • இந்த பழத்தில் புளிப்பு சுவை மிகுதியாக இருக்கிறது.
  • இதில் வைட்டமின் ஏ, சி மற்றும் கால்சியம் சத்து இருக்கிறது.
  • இனிப்பு மற்றும் புளிப்பு சுவை இரண்டுமே இதில் இருக்கிறது.

பலருக்கு இனிப்பு எப்படி பிடித்தமானதாய் இருக்கிறதோ அதேபோல சிலருக்கு புளிப்பு சுவை மிகவும் பிடித்தமானதாக இருக்கும்.  இனிப்பு சுவை மிகுந்த பழங்களுள் பெர்ரீஸுடன் ப்ளாக் கரன்டும் ஒன்று.  பலவகை ரெசர்ட் ரெசிபிகளில் சேர்க்கப்படும் இந்த ப்ளாக் கரன்ட்டில் ஏராளமான மருத்துவ குணம் இருக்கிறது.  இதில் வைட்டமின் சி மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.  மேலும் வைட்டமின் ஏ சத்து இருப்பதால் சருமம், கூந்தல் மற்றும் கண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.  இதில் கால்சியம் சத்தும் இருப்பதால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.  அடிக்கடி இந்த பழத்தை சாப்பிட்டு வரலாம்.  

ப்ளாக் கரன்ட் ஷீர் கோர்மா: 
இந்த பாரம்பரிய டெசர்ட் ரெசிபி பண்டிகை காலங்களில் செய்யப்படுகிறது.  சேமியா, பால், சர்க்கரை, உலர்ந்த திராட்சை, உலர்ந்த பழங்கள், பேரிச்சை, குங்குமப்பூ மற்றும் ஏலக்காய் சேர்த்து செய்யப்படும் இந்த ரெசிபி ருசியில் அலாதியானது.  இதனை ப்ளாக் கரன்ட் பழங்கள் கொண்டு அலங்கரித்து சாப்பிடலாம்.  blackcurrant seviyan

ப்ளாக் கரன்ட் சட்னி: 
புதினா சட்னி, தேங்காய் சட்னி மற்றும் கொத்தமல்லி சட்னி சாப்பிட்டு அலுத்துவிட்டதா?  இந்த ப்ளாக் கரன்ட் பழம் கொண்டு சட்னி செய்து பாருங்கள்.  இதனை சாண்ட்விச், சிப்ஸ், சாலட் மற்றும் பிரட் டோஸ்ட் ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட அருமையாக இருக்கும்.  


 

black currant chutney

 

Listen to the latest songs, only on JioSaavn.com

ப்ளாக் கரன்ட் பழத்தில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் இருக்கிறது. வீட்டிலேயே செய்யக்கூடிய டெசர்ட் ரெசிபிகளில் இதனை சேர்த்து சாப்பிட்டு வரலாம்.  Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement