சரும பிரச்சனைகளை போக்கும் உளுந்து

சருமத்தில் அழகை தவழவிட செய்யும் உளுந்து பற்றி தெரிந்து கொள்வோம்

  |  Updated: November 19, 2018 00:39 IST

Reddit
Urad Dal For Skin: 5 Amazing Home Remedies To Fight Skin Problems

பளிச்சிடும் சருமமே இங்கு எல்லோரும் விரும்பும் ஒன்றாக இருக்கிறது. என்னதான் இரசாயணங்கள் நிறைந்த க்ரீம்களை பயன்படுத்தினாலும் இயற்கை பொருட்களுக்கென்று தனி மகத்துவம் உண்டு. சருமத்தில் அழகை தவழவிட செய்யும் உளுந்து பற்றி தெரிந்து கொள்வோம்.

இறந்த செல்களை அகற்ற

முகத்தில் உள்ள அழுக்கு மற்றும் இறந்த செல்களை அகற்றுவதில் உளுந்துக்கு பெரும்பங்கு உண்டு.

எப்படி பயன்படுத்துவது?

 • இரவு தூங்க போகும் முன் அரை கப் உளுந்தை ஊற போட்டு காலையில் அரைத்து கொள்ளுங்கள்.
 • அத்துடன் இரண்டு மேஜைக்கரண்டி பால் மற்றும் இரண்டு மேஜைக்கரண்டி நெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
 • இந்த கலவையை முகத்தில் தடவி 30 நிமிடங்களுக்கு பிறகு கழுவி விடவும்.
 • வாரத்தில் மூன்று முறை இவ்வாறு செய்து வர முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கிவிடும்.
skin

முகப்பருக்களை போக்க

Newsbeep

உளுந்தில் இயற்கையாகவே ஆண்டிசெப்டிக் தன்மை இருக்கிறது. முகப்பருக்களை ஏற்படுத்தும் கிறுமிகளை அழித்து, முகத்துளைகளை சுத்தம் செய்துவிடுகிறது.

எப்படி பயன்படுத்துவது?

 • முதல் நாள் இரவே அரை கப் உளுந்தை ஊறவைத்து காலையில் அரைத்து கொள்ளவும்.
 • அத்துடன் இரண்டு மேஜைக்கரண்டி ரோஸ் வாட்டர், ஒரு மேஜைக்கரண்டி க்ளிசரின் சேர்த்து கொள்ளவும்.
 • அத்துடன் 2 மேஜைக்கரண்டி பாதாம் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
 • இதனை முகம் முழுவதும் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும்.
 • குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடவும்.
 • ஒருநாள் விட்டு ஒருநாள் இதனை முகத்தில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.
acne

முகம் பளிச்சிட

உளுந்து முகத்திற்கு சிறந்த ப்ளீச்சாக செயல்படும். சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. முகத்தில் உள்ள கருமையை போக்க வல்லது.

எப்படி பயன்படுத்துவது

 • கால் கப் உளுந்துடன் 8-9 பாதாம் சேர்த்து இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
 • காலையில் அதனை கெட்டியான பேஸ்ட் போல அரைத்து கொள்ளவும்.
 • அதனை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும்.
 • குளிர்ந்த நீரால் முகத்தை நன்கு கழுவிவிடவும்.
 • வாரம் மூன்று முறை இதனை செய்து வரலாம்.
skin

கருமை நிறம் மறைய

சருமத்திற்கு குளிர்ச்சியை கொடுக்கக்கூடியது உளுந்து.

எப்படி பயன்படுத்துவது?

 • கால் கப் உளுந்தை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் நன்கு அரைத்து கொள்ளவும்.
 • அத்துடன் 3 மேஜைக்கரண்டி தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
 • முகம் மற்றும் கை கால்களில் இந்த பேஸ்ட்டை அப்ளை செய்யவும்.
 • 15 நிமிடங்கள் உலர வைக்கவும்.
 • குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும்.
 • வாரத்தில் மூன்று முறை இப்படி செய்து வரலாம்.
skin

கரும்புள்ளிகளை மறைய செய்யும்

Listen to the latest songs, only on JioSaavn.com

வயது முதிர்ச்சியால் சருமத்தில் உண்டாகும் கரும்புள்ளிகள், வடுக்கள் ஆகியவற்றை நீக்கும் தன்மை உளுந்திற்கு உண்டு. இதில் ஆண்டிபாக்டீரியல் தன்மை இருப்பதால் சருமத்தை இளமையாக வைத்திருக்கும்.

எப்படி பயன்படுத்துவது

Comments

 • கால் கப் உளுந்தை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் அரைத்து கொள்ளவும்.
 • அத்துடன் அரை மேஜைக்கரண்டி அரிசி மாவை சேர்த்து கலக்கவும்.
 • அத்துடன் எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளவும்.
 • இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும்.
 • வாரம் இரண்டு முறை இப்படி செய்து வரலாம்.
skin


உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement