நீரிழிவு நோய் மற்றும் உடல் எடை குறைக்க வீகன் டயட்டை பின்பற்றலாம்!!

வீகன் உணவுகளை உட்கொள்வதால் உடல் எடையும் குறையும், இரத்த சர்க்கரையும் குறையும் என்பது தெரிய வருகிறது. 

   |  Updated: September 24, 2019 16:26 IST

Reddit
Vegan Diet Boosts Gut Microbes That Cause Weight Loss, Lower Risk Of Diabetes, Says Preliminary Study

வீகன் டயட்டில் உடலுக்கு தேவையான ஆரோக்கியம் இருக்கிறது.  சைவ உணவுகள் உடலுக்கு எப்போதுமே நன்மை பயக்கக்கூடியது.  குடலில் இருக்கக்கூடிய நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் வீகன் டயட்டை பின்பற்றுவதால் இன்னும் உற்சாகமாக செயல்பட்டு நீரிழிவு நோய் மற்றும் உடல் எடை குறைவதற்கு பயன்படுகிறது.  தொடர்ச்சியாக 16 வாரங்கள் வீகன் டயட்டை பின்பற்றினாலே உடல் எடை குறைவதை உணர முடியும்.  மேலும் இரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும்.  

Listen to the latest songs, only on JioSaavn.com

உடல் பருமனாக இருக்கக்கூடியவர்களுக்கு தொடர்ச்சியாக 16 வாரங்கள் வீகன் டயட் உணவுகள் வழங்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.  இதில் 147 பேர் பங்கேற்றனர்.  அதில் 86 சதவிகிதம் பெண்களும், 14 சதவிகித ஆண்களும் கலந்து கொண்டனர்.  இவர்களுக்கு லோ-ஃபேட் வீகன் டயட் வழங்கப்பட்டது.  இதன் விளைவாக உடல் எடை  குறைவு, இன்சுலின் சுரப்பு ஆகியவை சீராக இருப்பதும் தெரிய வந்தது.  

Newsbeep

கொழுப்புச்சத்து குறைந்த உணவுகளை உட்கொண்டதால் உடல் எடை குறைவது கவனிக்கப்பட்டது.  இதனால் உடலில் இன்சுலின் சுரப்பு சீராக இயங்குவதும், உடல் எடை குறைவதும், குடலில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியா மேலும் ஆரோக்கியமாக இருப்பதும் தெரிய வந்தது.  நார்ச்சத்து நிறைந்த உணவை தொடர்ச்சியாக உட்கொண்டதால் உடலில் கலோரிகள் குறைந்துள்ளதையும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  ஆகவே, வீகன் உணவுகளை உட்கொள்வதால் உடல் எடையும் குறையும், இரத்த சர்க்கரையும் குறையும் என்பது தெரிய வருகிறது. 

Comments

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement