வீகன் மற்றும் க்ளூட்டன் ஃப்ரீ டோனட் செய்வது எப்படி??

க்ளூட்டன் ஃப்ரீ சாக்லேட் க்ரானோலா டோனட்டை வீட்டிலேயே தயார் செய்து பாருங்கள்.

  | Translated by: Kamala Thavanidhi  |  Updated: July 05, 2019 15:39 IST

Reddit
Watch: Make Vegan, Gluten-Free Chocolate Doughnut At Home With This Quick And Easy Recipe
Highlights
  • பீனட் பட்டர் சேர்ப்பதான் உடலுக்கு புரதம் கிடைக்கிறது.
  • டோனட்டை வீட்டிலேயே தயாரிப்பது மிகவும் எளிமையானது.
  • சாக்லேட் டோனட்டை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஸ்நாக்ஸ் என்றால் அது டோனட் தான்.  நிறைய ஃப்ளேவர்ஸுடன் புதுமையான ருசியில் தற்போது டோனட்கள் கிடைக்க ஆரம்பித்துவிட்டது.  கேக், ஐஸ்கிரீம் மற்றும் மற்ற இனிப்பு வகைகளை வீட்டிலேயே கூட செய்து சாப்பிட்டிருப்போம்.  ஆனால் டோனட்டை வீட்டில் செய்து சாப்பிடுவது என்பது சமீபத்தில் தான் அதிகரித்திருக்கிறது.  ருசியான டோனட்டை வீட்டிலேயே எப்படி செய்வதென்று பார்ப்போம்.  

முதலில் ஒரு டோனட் ட்ரே வாங்கி கொள்ளுங்கள்.  பாதாம், பீனட் பட்டர் மற்றும் க்ரானோலா ஆகியவற்றை தரமானதாக பார்த்து வாங்கி கொள்ளுங்கள்.  வீகன் மற்றும் க்ளூட்டன் ஃப்ரீ டோனட்டை எவ்வாறு செய்யலாம் என்ற குறிப்புகளை தெரிந்து கொள்ளுங்கள்.  

Newsbeep

Listen to the latest songs, only on JioSaavn.com

தேவையானவை: 
சாக்லேட் - 200 கிராம் 
பாதாம் - 2 மேஜைக்கரண்டி 
பீனட் பட்டர் - 2 மேஜைக்கரண்டி 
க்ரானோலா - 1/2 கப் 

செய்முறை: 
சாக்லேட்டுடன் பாதாம், பீனட் பட்டர் மற்றும் க்ரானோலா ஆகியவை சேர்த்து நன்கு கலந்து கொண்டு அதனை ஒரு பைப்பிங் பேக்கில் மாற்றிக் கொள்ளவும்.  பின் டோனட் ட்ரேயில் இந்த சேர்த்து 1-2 மணி நேரம் ப்ரிட்ஜில் வைத்து பின் எடுத்து சாப்பிடலாம்.  சுவையான சாக்லேட் டோனட் தயார்.  குழந்தைகளுக்கு இது மிகவும் பிடிக்கும் என்பதால் அடிக்கடி செய்து கொடுக்கலாம்.  

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement