வைட்டமின் டி பற்றாக்குறையை போக்க இவற்றை சாப்பிடுங்கள்..!!!

உடலில் வைட்டமின்கள் போதிய அளவு இருந்தால் மட்டுமே எலும்பு, பற்கள் உறுதியாக இருக்கும்.  வைட்டமின் டி பற்றாக்குறையினால் தசை வலி், எலும்பு மற்றும் மூட்டு வலி, எலும்பு முறிதல் போன்ற பிரச்னை ஏற்படும். 

Edited by: Kamala Thavanidhi  |  Updated: April 24, 2019 16:16 IST

Reddit
7 Healthy Vitamin D Foods You Must Eat To Avoid Vitamin D Deficiency
Highlights
  • வைட்டமின் டி குறைவாக இருந்தால் எலும்பு முறிவு ஏற்படும்.
  • வைட்டமின் டி சூரிய ஒளியில் நிறைய கிடைக்கிறது.
  • சில உணவுகளில் வைட்டமின் டி அதிகம் இருப்பதால் அவற்றை சாப்பிடலாம்.

”சன்ஷைன் வைட்டமின்” என்று அழைக்கப்படும் வைட்டமின் டி உடலுக்கு மிகவும் இன்றியமையாத சத்து.  ஆனால் உலகளாவில் வைட்டமின் டி குறைபாட்டால் நிறைய மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.  உடலில் கால்சியம், மக்னீஷியம், பாஸ்பேட் ஆகியவற்றை உடலில் தக்கவைத்து கொள்ள வைட்டமின் டி உதவுகிறது. உடலில் வைட்டமின்கள் போதிய அளவு இருந்தால் மட்டுமே எலும்பு, பற்கள் உறுதியாக இருக்கும்.  வைட்டமின் டி பற்றாக்குறையினால் தசை வலி், எலும்பு மற்றும் மூட்டு வலி, எலும்பு முறிதல் போன்ற பிரச்னை ஏற்படும்.  இதன் விளைவாக சிலருக்கு ஆஸ்டியோபோரோசிஸ், ரிக்கெட்ஸ் மற்றும் ஆர்த்திரிடிஸ் போன்ற உடல் உபாதைகள் ஏற்படும்.சூரிய கதிரில் இயற்கையான வைட்டமின் டி சத்து நிறைந்துள்ளது.  பெரும்பாலானோர் வெயில் வெப்பத்திற்கு பயந்து வெளியே சென்று விளையாடுவதை தவிர்த்துவிடுவார்கள்.  ஆனால் குறைவான வெயிலில் விளையாடுவது நம் உடலுக்கு மிகவும் நல்லது.  வைட்டமின் டி குறைபாட்டால் என்னென்ன அறிகுறிகள் இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 

vitamin d

 1. நீங்கள் எப்போதும் சோர்வாகவும், சத்து இல்லாதது போலும் உணர்ந்தால் உங்கள் உடலில் வைட்டமின் டி அளவு இருக்கிறதா என்பதை பரிசோதித்து கொள்ளுங்கள்.2. நீங்கள் நடக்கும்போது, படிக்கட்டு ஏறும்போது, தொடர்ச்சியாக உங்களுக்கு தசை வலி அல்லது மூட்டு வலி இருந்தால் உங்களுக்கு வைட்டமின் டி பற்றாக்குறை இருக்கிறதென்று அறிக. 3. வைட்டமின் டி குறைபாட்டால் அதிகபடியாக முடி உதிர்வு ஏற்படும். 4. உங்களுக்கு ஏற்பட்ட காயங்கள் குணமாக தாமதமாகும். 5. தொடர்ச்சியாக செரிமான பிரச்னையால் அவதிப்பட்டு வந்தால் வைட்டமின் டி குறைபாடு இருக்க வாய்ப்புள்ளது. 6. வைட்டமின் டி குறைபாடு இருந்தால் முகம் மிகவும் சோர்வாக காணப்படும்.  உடலில் வைட்டமின் டி அதிகரிக்க சில ஆரோக்கிய உணவுகளை உங்களுக்காக பரிந்துரைக்கிறோம். பால்:

தினமும் ஒரு க்ளாஸ் பால் குடிப்பதால் நமக்கு 20 சதவிகிதம் வைட்டமின் டி கிடைக்கிறது.  பாலில் வைட்டமின் டி மற்றும் கால்சியம் நிறைந்திருக்கிறது.  கொழுப்பு நீக்கப்படாத பால் குடிப்பதால் உடலுக்கு தேவையான சக்திகள் கிடைப்பதில்லை. கொழுப்பு நீக்கப்படாத பாலில் 4 சதவிகிதம் கொழுப்பு மற்றும் வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே இருக்கிறது உடலுக்கு தேவையான சத்துக்கள் ஒரு க்ளாஸ் பாலில் அடங்குகிறது. 

k48n3pfg

 

யோகர்ட்:

யோகர்டில் புரதம் மற்றும் வைட்டமின் டி இருக்கிறது.  ஆனால் தற்போது ஃப்ளேவர்டு யோகர்ட் மார்கெட்களில் கிடைக்கின்றன.  ஃப்ளேவர்டு யோகர்ட் என்பது செயற்கையாக இனிப்புகள் சேர்க்கப்பட்டவை.  இதனை வாங்கி சாப்பிடாமல் வீட்டிலே தயார் செய்து சாப்பிடலாம்.

n4b636q

 

ஆரஞ்சு சாறு:

அரஞ்சு பழச்சாறில் வைட்டமின் டி மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளது.  காலை உணவுடன் ஆரஞ்சு பழச்சாறு அருந்தினால் ஒருநாளில் உங்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து சத்துக்களும் கிடைத்துவிடுகின்றன.  ஆரஞ்சு பழத்தை வாங்கி வீட்டிலேயே ஜூஸ் செய்து குடிக்கலாம்.  கடைகளில் வாங்குவதை தவிர்க்கவும். 

6uc3k57

 

ஓட்மீல்:

முழுதானியங்களை போல ஓட்ஸிலும் வைட்டமின் டி நிறைந்திருக்கிறது.  அதனை தவிர இதில் வைட்டமின், தாதுக்கள் மற்றும் கார்போஹைட்ரேட் இருக்கிறது.  இது உங்கள் உடலுக்கு ஆரோக்கியம் மற்றும் நல்ல வடிவத்தை கொடுக்கிறது. மஷ்ரூம்:

மஷ்ரூம்கள் சூரிய ஒளியில் வளர்கிறது என்பதால் அதில் வைட்டமின் டி சத்துக்கு பஞ்சமில்லை.  அது தவிர மஷ்ரூமில் வைட்டமின் பி1, பி2, பி5, தாதுக்கள் மற்றும் காப்பர் ஆகியவையும் இருப்பதால் அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம். 

asf93g7

 

முட்டை:

முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் டி இருக்கிறது.  ஆனால் அதில் கொழுப்பு மற்றும் அதிக கலோரிகளும் உண்டு.  புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் எல்லாமே நிறைந்திருக்கிறது.  காய்கறிகள் மற்றும் முட்டை சேர்த்து ஆம்லெட் செய்து சாப்பிடலாம். 

egg yolk

 

மீன்:

கொழுப்பு சத்து நிறைந்த மீனை தினமும் உணவில் சேர்த்து கொள்ளலாம்.  புரதம், கால்சியம், வைட்டமின் டி மற்றும் பாஸ்பரஸ் நிறைந்திருப்பதால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.  இந்த உணவுகளை தொடர்ச்சியாக உண்டு வந்தால் உடலில் வைட்டமின் டி சத்து தானாக அதிகரித்துவிடும். உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com