வால்நட் சாப்பிடுவதால் அல்சர் குணமாகுமா?

வால்நட்டில் வைட்டமின் ஈ, மற்றும் மெலடோனின் இருப்பதால் உடலில் கொலஸ்ட்ரால் சேராமல் இருக்கும்.  இதில் பாலிஃபினால் இருப்பதால் புற்றுநோய் அபாயம் தடுக்கப்படுகிறது. 

Translated by: Kamala Thavanidhi  |  Updated: August 14, 2019 14:02 IST

Reddit
Walnuts May Offer Protective Benefits Against Ulcerative Colitis: Study

விதைகளுள் ஆரோக்கியமானது வால்நட்.  வால்நட்டில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருக்கிறது.  குறிப்பாக ஃபைட்டோகெமிக்கல், ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் ஆரோக்கிய கொழுப்புகள் நிறைந்திருக்கிறது.  இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உங்களை நாள் முழுக்க நிறைவாக உணர வைக்கிறது.  இதனால் குடல் இயக்கங்களும், செரிமான பிரச்னைகளும் ஏற்படாது.  குடலில் வீக்கம், வாயுத் தொல்லை, அல்சர் போன்ற பிரச்னைகள் குணமாக வால்நட் சாப்பிடலாம்.   இந்த பரிசோதனையை எலிகளிடத்தில் நடத்தப்பட்டது.  தினமும் 20 முதல் 25 வால்நட் வீதம் எலிகளுக்கு கொடுக்கப்பட்டது.  இரண்டு வாரங்கள் தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டு பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது.  

இதன் விளைவாக, எலிகளுக்கு குடல் இயக்கங்களும் வயிற்றில் இருக்கக்கூடிய அல்சர் பிரச்னைகளும் குணமாவதை காண முடிந்தது.  ஆகவே, தினமும் வால்நட்டை சாப்பிட்டு வரலாம்.  வால்நட்டில் வைட்டமின் ஈ, மற்றும் மெலடோனின் இருப்பதால் உடலில் கொலஸ்ட்ரால் சேராமல் இருக்கும்.  இதில் பாலிஃபினால் இருப்பதால் புற்றுநோய் அபாயம் தடுக்கப்படுகிறது.  உடல் எடை குறைக்க வால்நட்டை ஸ்மூத்தியாக செய்து குடிக்கலாம்.  அதேபோல நீரிழிவு நோயாளிகளும், உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்களும் கூட வால்நட்டை தொடர்ச்சியாக சாப்பிட்டு வரலாம்.  இளமை தோற்றத்தை தக்க வைக்க நினைத்தால் தினமும் வால்நட் சாப்பிட்டு வரலாம்.  Comments

(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement