ஆரோக்கியம் நிறைந்த வீகன் பர்ஃபியை நீங்களே தயார் செய்யலாம்!!

ஆப்பிள், தேங்காய் ஆகிய இரண்டையும் கொண்டு இந்த க்ளூட்டன் ஃப்ரீ பர்பியை தயாரிக்கலாம்.  இவை இரண்டிலுமே கலோரிகள் மிகவும் குறைவு என்பதால் உடல் எடை குறைக்க உதவுகிறது.  

   | Translated by: Kamala Thavanidhi  |  Updated: June 18, 2019 12:09 IST

Reddit
Gluten-Free Sweet: Watch Easy Recipe Of This Healthy, Vegan Barfi
Highlights
  • இந்த வீகன், க்ளூட்டன் ஃப்ரீ பர்ஃபியில் ஆரோக்கியம் அதிகம் உண்டு.
  • ஆப்பிள் மற்றும் தேங்காயில் கலோரிகள் குறைவு.
  • க்ளூட்டன் அலர்ஜி உள்ளவர்கள் இந்த பர்ஃபியை சாப்பிடலாம்.

இனிப்பு வகைகள் எல்லாமே அதிகபடியான கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்தது.  அப்படியான உணவுகள் உடல் எடையை அதிகரிக்க செய்வதுடன் ஆரோக்கியத்தையும் கெடுத்துவிடுகிறது.  உடல் எடை குறைக்க நம்மில் பலரும் வீகன் டயட்டிற்கு மாறி வருவதை பார்த்திருப்போம்.  க்ளூட்டன் ஃப்ரீ உணவுப் பொருட்களை கொண்டு எளிமையான இனிப்புகளை எப்படி ஆரோக்கியமாக செய்யலாம் என்று பார்ப்போம்.  

பர்ஃபியை விரும்பாதவர்கள் யாரேனும் இருக்க முடியுமா? பர்ஃபி வெவ்வேறு பொருள் கொண்டு வெரைட்டியாக செய்யப்படுகிறது.  அவற்றுள் எல்லோருக்கும் விரும்பமானது முந்திரி பர்ஃபி, கடலைமாவு பர்ஃபி, கும்குமப்பூ மற்றும் அத்தி பர்ஃபி.  இவை அனைத்தையுமே சேர்த்து இன்னும் ருசியான மற்றும் ஆரோக்கியமான பர்ஃபியை எப்படி தயாரிப்பது என்பது குறித்து தான் இப்போது பார்க்க போகிறோம்.  ஆப்பிள், தேங்காய் ஆகிய இரண்டையும் கொண்டு இந்த க்ளூட்டன் ஃப்ரீ பர்பியை தயாரிக்கலாம்.  இவை இரண்டிலுமே கலோரிகள் மிகவும் குறைவு என்பதால் உடல் எடை குறைக்க உதவுகிறது.  

Newsbeep

தேவையான பொருட்கள்: 
ஆப்பிள் - 3 கப் 
துருவிய தேங்காய் - 1 கப் 
சர்க்கரை - 1/2 கப் 
வால்நட் - 1/2 கப் 
ஏலக்காய் - 1/4 தேக்கரண்டி 
பிஸ்தா - 1 மேஜைக்கரண்டி 

Listen to the latest songs, only on JioSaavn.com


 
 

செய்முறை: 
முதலில் ஆப்பிளை தோல் நீக்கி துருவி கொள்ளவும்.  அடுப்பில் கடாய் வைத்து அதில் துருவிய ஆப்பிளை சேர்க்கவும்.  அத்துடன் துருவிய தேங்காய் மற்றும் சர்க்கரையை சேர்த்து வதக்கவும்.  15 நிமிடங்கள் வெந்த பின் அத்துடன் வால்நட், ஏலக்காய் சேர்க்கவும்.  பின் இதனை ஒரு சதுரமான கண்ணாடி பாத்திரத்தில் சேர்த்து ஆறிய பின் பிஸ்தா சேர்த்து அலங்கரித்து சாப்பிடலாம்.  

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement