காய்கறி, பழங்கள் நீண்ட காலம் கெடாமல் இருக்க இதைச் செய்து பாருங்கள்!

அதிகப்படியான கழிவுகளை உருவாக்காத ஒரு சமையலறையைப் பராமரிப்பதற்கான போராட்டம் மிகவும் உண்மையானது, ஏனென்றால் எப்போதுமே ஏதேனும் ஒன்று அல்லது மற்றொன்று வீணாகி எறிந்து விடப்படப்படுகிறது.

   |  Updated: March 23, 2020 20:10 IST

Reddit
Watch: How To Make Fruits And Vegetables Last Longer And Reduce Kitchen Waste

சமையலறையில் உள்ள பொருட்கள் நீண்ட காலம் பாதுகாக்கப்படலாம்.

Highlights
  • பழங்கள், காய்கறிகளை இந்த எளிய சமையலறை குறிப்புகளுடன் பாதுகாக்கலாம்
  • ஹேக்குகள் கீரை, தக்காளி, உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளை பாதுகாக்கின்றன
  • சிறந்த முடிவுகளுக்கு, தினசரி சமையலறை வழக்கத்தில் அவற்றைச் சேர்க்கவும்

ஒரு சிறந்த சமையல் அறை என்பது, இருக்கும் எல்லாப் பொருட்களுக்கும் ஒரு பயன்பாடு இருக்கும். சுற்றுச்சூழல் நட்பு சமையலறையை உருவாக்குவதற்கான சரியான வழி, அதை நிலையானதாக மாற்றுவதாகும், இதில் பயன்பாட்டை அதிகரிப்பது மற்றும் கழிவுகளைக் குறைப்பது ஆகியவை அடங்கும். அதிகப்படியான கழிவுகளை உருவாக்காத ஒரு சமையலறையைப் பராமரிப்பதற்கான போராட்டம் மிகவும் உண்மையானது, ஏனென்றால் எப்போதுமே ஏதேனும் ஒன்று அல்லது மற்றொன்று வீணாகி எறிந்து விடப்படப்படுகிறது. இது அதிகப்படியாகப் பழுத்த வாழைப்பழங்கள், அல்லது கெட்டுப்போன தக்காளி - புதிய பழங்கள் மற்றும் காய்கறிகளை நிராகரிப்பது துரதிர்ஷ்டவசமாக ஒரு பொதுவான நடைமுறையாகும்.

Newsbeep

சிறந்த வழி என்னவென்றால், தற்போதுள்ள சமையலறை உற்பத்தியை நீண்ட காலம் நீடிக்கும் நுட்பங்களை உருவாக்குவது, இதனால் வீணாகப் போவதைப் பற்றிக் கவலைப்படாமல் ஒரு பெரிய காலத்திற்கு அதைப் பயன்படுத்தலாம். சமையலறையில் இருக்கும் பொருட்களின் புத்துணர்வைப் பராமரிக்க உதவும் பல ஹேக்குகளுடன் இதை எளிதாகச் செய்ய முடியும். விளைபொருள்கள் இயற்கையில் அழிந்துபோகும், அதாவது இது விரைவில் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் இந்த சமையலறை ரகசியங்கள் மற்றும் உதவிக்குறிப்புகள் மூலம், பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பயன்படுத்துவதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.

jvggn0g

பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிக நாட்கள் பயன்படுத்த சில சமையலறை ஹேக்குகள் இங்கே:

  1. கீரை(Lettuce) - அதிகபட்ச புத்துணர்வைத் தக்கவைக்க 10: 1 என்ற விகிதத்தில் தண்ணீர் மற்றும் வினிகர் கலவையில் கீரையைக் கழுவவும். ஒரு காகித துண்டு உதவியுடன் அதை உலர்த்தி, சிறந்த முடிவுகளுக்காக ஒரு பிளாஸ்டிக் பையில் சேமிக்கவும்.
  2. உருளைக்கிழங்கு - உருளைக்கிழங்கை ஃப்ரஷாக வைத்திருக்க, அவற்றை ஆப்பிள்களுடன் சேமித்து வைத்தால், அவை முளையிடாமல் தடுக்கும்.
  3. காளான்கள் - அவற்றை ஒரு பழுப்பு(Brown) காகிதப் பையில் சேமிக்கவும்.
  4. தக்காளி - அவை நீண்ட காலம் நீடிக்க வைக்க, அவற்றின் தண்டுடன் சேமிக்க வேண்டும்
  5. எலுமிச்சை - எலுமிச்சைகளை எப்போதும் ஒரு பிளாஸ்டிக் பையில் சேமித்து, அவற்றை எப்போதும் ஃப்ரஷாக வைத்திருக்க ஃபிரிட்ஜில் வைக்கவும்
  6. வாழைப்பழங்கள் - வாழைப்பழங்கள் பழுக்காமல் இருக்க, வாழைப்பழத் தண்டுகளுடன் வைக்கவும்

எனவே, இந்த விரைவான ஹேக்குகளால், பழங்கள் மற்றும் காய்கறிகள் அவற்றின் அசல் அமைப்பையும் சுவையையும் இழக்காமல் பயன்பாட்டில் உள்ளன. உங்கள் சமையலறையில் இருக்கும் காய்கறி, பழங்கள் இயல்பை விட நீண்ட காலம் நீடிக்கும்.

முழு வீடியோவைப் பார்க்க க்ளிக் செய்யவும்:

Listen to the latest songs, only on JioSaavn.com

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement