ருசியான பாஸ்தாவை வீட்டிலேயே செய்யலாம்!!

கோதுமை, ஓட்ஸ் மற்றும் பார்லி போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.  சப்பாத்திக்கு பதிலாக சிவப்பு அரிசி சேர்க்கலாம். 

Translated by: Kamala Thavanidhi  |  Updated: May 31, 2019 19:39 IST

Reddit
Gluten-Free Diet: Watch How To Make Gluten-Free Vegan Zucchini Pasta At Home
Highlights
  • க்ளூட்டன் ஃப்ரீ உணவுகளை உடல் எடை குறைக்க சாப்பிடலாம்.
  • சப்பாத்திக்கு பதிலாக சிகப்பு அரிசியை பயன்படுத்தலாம்.
  • சூக்கினியுடன் மஷ்ரூம் சேர்த்து இந்த பாஸ்தாவை செய்யலாம்.

க்ளூட்டன் ஃப்ரீ உணவுகளை தயாரிப்பதில் அதிகப்படியான கவனம் தேவை.  கோதுமை, ஓட்ஸ் மற்றும் பார்லி போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.  சப்பாத்திக்கு பதிலாக சிவப்பு அரிசி சேர்க்கலாம்.  சோள மாவு கொண்டு சப்பாத்தி செய்யலாம்.  தினை கொண்டு நூடுல்ஸ் மற்றும் ப்ரட்டிற்கு பதிலாக க்ளூட்டன் ஃப்ரீ பாஸ்தா சாப்பிடலாம்.  அதேபோல, சோயா சாஸ், வினிகர் மற்றும் மார்க்கெட்களில் கிடைக்கக்கூடிய சாஸ்களையும் தவிர்ப்பது நல்லது.  பீட்ரூட், கீரைகள், வெள்ளரி, கத்திரிக்காய், பூண்டு, லீட்யூஸ், மஷ்ரூம், வெங்காயம், வெண்டைக்காய், உருளைக்கிழங்கு, சூக்கினி, பாதாம் மாவு, சிவப்பு அரிசி, கடலை மாவு, சோளமாவு, பருப்பு, ஆளிவிதை மற்றும் சிறுதானியங்கள் இயற்கையாகவே க்ளூட்டன் ஃப்ரீயாக இருக்கிறது.  வீட்டிலேயே இயற்கையான உணவு பொருட்களை கொண்டு எப்படி ருசியான பாஸ்தாவை தயாரிப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்:சூக்கினி - 2 

மஷ்ரூம் - 1/2 கப் 

ஆலிவ் ஆயில் -  1 தேக்கரண்டி 

உப்பு - 1/4 தேக்கரண்டி 

தக்காளி - 2 கப் 

ஒரீகனோ - 1/4 தேக்கரண்டி 

மிளகு - 1/8 தேக்கரண்டி 

சர்க்கரை - 2 தேக்கரண்டி 

சோளமாவு - 1/2 தேக்கரண்டி செய்முறை:

அடுப்பில் கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, அதில் சில்லி ஃப்ளேக்ஸ், மிளகு, ஓரிகனோ, தக்காளி, உப்பு, மிளகு , சோளமாவு, சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து வேக வைக்கவும்.  அதனை தனியே எடுத்து வைக்கவும்.  பின் கடாயில் மஷ்ரூம் மற்றும் சூக்கினியை சேர்த்து வதக்கி இரண்டையும் நன்கு கலந்து பரிமாறவும்.  Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement