கொரோனா காலத்தில் மாஸ்க் அணிந்து கொண்டே சாப்பிடுவது எப்படி? - வைரல் வீடியோ

மாஸ்க் அணிந்து கொண்டே சாப்பிடலாம் என்று இங்கிலாந்து மாடல் நடிகை வேடிக்கையான ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

  |  Updated: July 25, 2020 13:12 IST

Reddit
Watch Viral Video: Cool Hack To Eat Food While Wearing Mask Impressed The Netizens

இரண்டு மாஸ்க் அணிந்து, உணவு சாப்பிடும் மாடல் அழகி

Highlights
  • மாஸ்க்கை கழற்றாமலே உணவு சாப்பிடும் மாடல் நடிகை
  • இந்த வீடியோ வைரலாகி வருகிறது
  • அவர் எப்படி சாப்பிடுகிறார் என்பதைப் பாருங்கள்

மாஸ்க் அணிந்து கொண்டே எப்படிச் சாப்பிடலாம் என்று மாடல் நடிகை ஒருவர் வேடிக்கையான ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் பரவலில் இருந்த தற்காத்துக் கொள்ள மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெரும்பாலானோருக்கு இது தெரியும். அதை விடாமுயற்சியுடன் பின்பற்றுகிறோம். ஆனால், நாம் வீட்டை விட்டு வெளியேறும்போது அல்லது நீண்ட நேரம் முக்கியமான வேலையைச் செய்யும்போது, ​​சில சமயங்களில் பசி ஏற்படும். சாப்பிட வேண்டுமென்றால் முகமூடியை அகற்ற வேண்டியிருக்கும். 

இந்நிலையில், எம்மா லூயிஸ் கோனொல்லி என்ற இங்கிலாந்து மாடல் நடிகை ஒருவர், மாஸ்க் அகற்றாமல் எப்படி சாப்பிடலாம் என்பது குறித்து வேடிக்கையான ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், அவர் ஒரு காரில் உட்கார்ந்து இரண்டு முகமூடிகளுடன் சாப்பிடுவதைக் காணலாம். எம்மா லூயிஸ் இரண்டு எளிய முகக்கவசங்களை அணிந்திருக்கிறார். ஒன்று அவரது மூக்கு மற்றும் வாயின் மேல் பகுதியை மூடியுள்ளது.  மற்றொன்று வாயின் கீழ் பகுதியை மூடியுள்ளது. எனவே, அவர் வாய் திறந்தபோது, ​​இரண்டு முகக்கசமும் சரியான இடைவெளியில் உணவு வாய்க்குள் செல்ல வழி கொடுத்தன. இரு முகக்கவசமே வாய் போல் திறந்து மூடும் வீடியோ பார்ப்பதற்கு வேடிக்கையாக உள்ளது. 

NewsbeepA post shared by Emma Lou (@emmalouiseconnolly) on

Listen to the latest songs, only on JioSaavn.comஇந்த வீடியோவை எம்மா லூயிஸ் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட, சற்று நேரத்தில் வைரலாக பரவியது. கிட்டத்தட்ட 3 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும் 2000க்கும் மேற்பட்ட கருத்துகளையும் பெற்றுள்ளது. இன்ஸ்டாகிராமில் அவரை பின்பற்றுபவர்கள் இதைப் பார்த்து சிரித்த வருகின்றனர். "ஜீனியஸ் பேப்", "சூப்பராக சாப்பிடுகிறீர்கள்" என வரிசையாக கமெண்ட்ஸ் வந்த வண்ணம் உள்ளன.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement