தர்பூசணி

அதிக தண்ணீர் அளவு கொண்ட ஆரோக்கியமான பழ வகையில் ஒன்று

एनडीटीवी  |  Updated: June 13, 2018 01:58 IST

Reddit
Watermelon
Highlights
  • • தர்பூசணி சாப்பிடுவதனால் அமைதியான உறக்கம் ஏற்படும்
  • அதிக தண்ணீர் அளவு கொண்ட ஆரோக்கியமான பழ வகையில் ஒன்று
  • • வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி, பொட்டாசியம் அதிகம் நிறைந்தது
 
வெள்ளரிக்காய், பூசணிக்காய் வரிசையில் தர்பூசணியும் காய்கறி வகையை சேர்ந்தது. எனினும், தர்பூசணியின் சாறு பழ வகையாக சாப்பிடப்படுகிறது. தர்பூசணியில் 92 சதவிதம் தண்ணீர் உள்ளது. ஆரோக்கியமான பழ வகை

சிவப்பு நிறத்தில் இருக்க கூடிய பழப்பகுதியில், விதைகள் உள்ளன.  பழ வகைகளை பொறுத்து நிறம் மாறும். ஒரு தர்பூசணிப்பழம் 90 பவுண்டுகள் வரை எடை கொண்டதாக இருக்க கூடும்.

கடந்த சில ஆண்டுகளாக, விதைகளற்ற தர்பூசணி அதிகளவில் விற்கப்படுகின்றன. இது போன்ற பழவகையின் ஆரோக்கியம் குறித்த விவாதங்கள் இன்றும் உள்ளன.

ஜூபிலி, ராயல் ஜூபிலி, க்ரிம்சன் இனிப்பு, ஆகியவை வழக்கமான தர்பூசணி வகைகள் ஆகும்.பயன்பாடு
கோடைக்கால பழ வகைகளில் அதிக நீர்சத்து கொண்டது தர்பூசணிப்பழம்.  தர்பூசணிப்பழ ஜூஸ் அதிகளவில் மக்கள் விரும்பி குடிக்கின்றனர்.  பழ சாலட்களில், பயன்படுத்தப்படுகின்றன.  ஆசிய நாடுகளில், வறுக்கப்பட்ட தர்பூசணி விதைகள் சாப்பிடுகின்றன.


ஊட்டச்சத்து
  • அதிக தண்ணீர் அளவு கொண்ட ஆரோக்கியமான பழ வகையில் ஒன்று
  • பொட்டாசியம் அதிகம் உள்ளதால், இரத்த அழுத்தம் மற்றும் இருதய் துடிப்பினை சீராக வைத்து கொள்ள உதவும்
  • தர்பூசணி சாப்பிடுவதனால், அமைதியான உறக்கம் ஏற்படும்
  • சிறுநீரகத்தில் உள்ள அசுத்தங்களை போக்க உதவும்
  • வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி, பொட்டாசியம் அதிகம் நிறைந்தது. ஆஸ்த்மா, நீரிழிவு ஆகிய நோய்களுக்கு மருந்தாக அமையும்.
 
உங்களுக்கு தெரியுமா?
5000 ஆண்டுகளுக்கு முன்னர், முதன் முதலில் எகிப்து நாட்டில் தர்பூசணி பயிரிடப்பட்டது
வியட்நாம் புத்தாண்டு அன்று, தர்பூசணி விதைகள் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
துருக்கி நாடு, தியார்பகிரின் சின்னமாக தர்பூசணி உள்ளது
உலகம் முழுவதும் 1200 வகைகளுக்கு மேலான தர்பூசணி உள்ளது
 

Comments 

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
Tags:  Ingredients

Advertisement
Advertisement