நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டும் தர்பூசணி லெமன் ஜூஸ்!- செய்வது எப்படி? (வீடியோ உள்ளே)

எலுமிச்சையில் சிட்டரஸ், வைட்டமின் சி உள்ளது. இது  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தாகத்தையும் தணிக்கும்

  |  Updated: July 27, 2020 14:59 IST

Reddit
Watermelon Lemonade - A Hydrating, Immunity-Boosting Drink You Can Easily Make At Home (Recipe Video)

வைட்டமின் சி சத்து நிறைந்த தர்பூசணி லெமனேடு

Highlights
  • Watermelon is an extremely nutritious fruit.
  • Watermelon and lemon juice make for a great immunity-boosting drink.
  • Watch the recipe video to make it at home.

கோடைக்காலம், வெயில் காலத்தில் நமக்கு அதிகளவு நீர்ச்சத்து தேவைப்படும். குறிப்பாக வெயிலில் வெளியே செல்பவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 2 டம்ளர் ஜூஸ் குடித்தால்தான் உடலுக்குத் தேவையான சக்திகளைப் பெற முடியும். இல்லையெனில் உடனடி சோர்வு, தலைச்சுற்றல், மயக்கம் ஏற்படலாம். அந்தவகையில், வைட்டமின் சி சத்து நிறைந்த தர்பூசணி லெமனேடு பற்றி இங்குப் பார்க்கலாம். இது உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து ஹைட்ரேட் வழங்கி, உடலையும் மனதையும் புத்துணர்ச்சி அடையச் செய்கிறது.

சீசன் காலத்தில் தர்பூசணி ஜூஸ் மிகச்சறிந்த பானமாகும். நல்ல இனிப்புடன், நீர் மிகுந்து காணப்படும் தர்பூசணியை சாதாரணமாக ஒரு துண்டு சாப்பிட்டாலே தண்ணீர் தாகம் அடங்கிவிடும். நாவும், தொண்டையும், வயிறும் குளிர்ச்சியடையும். இதில் அதிகளவு நீர் உள்ளதால், நீர்சத்து குறைபாட்டுக்கு ஏற்றதாகும். மேலும், ஒரு கிளாஸ் தர்பூசணி ஜூஸில் எவ்வளவு நன்மைகள் உள்ளது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். 

தர்பூசணி ஜூஸூடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்துப் பருகலாம். எலுமிச்சையில் சிட்ரஸ், வைட்டமின் சி உள்ளது. இது  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தாகத்தையும் தணிக்கும். கோடைக்காலத்தில் லெமன் ஜூஸ், தர்பூசணி ஜூஸ், கரும்புச்சாறு போன்றவைகளை கட்டாயம் குடிக்க வேண்டும். 
 Listen to the latest songs, only on JioSaavn.com

ராஜீ குப்தா என்ற சமையல் நிபுணர், தர்பூசணி லெமனேடு குறித்து தனது யூடியூப் சேனிலில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதன்படி, தர்பூசணி துண்டுகளை வெட்டாமல் ஒரு ஐஸ்கிரீம் ஸ்கூப் கரண்டியின் உதவியுடன் அதன் சதைப் பகுதிகளை சுலபமாக வெளியே எடுத்தார். இப்போது தர்பூசணி சதைப் பகுதி மட்டும் அப்படியே எடுத்து, தோல் பகுதியைத் தனியாக கூடு போல் வைத்துக் கொண்டார். 

தர்பூசணியின் விதைகளை சல்லடை அல்லது கைகளால் எடுக்க வேண்டும். பின்பு, மிக்சி / ஜூஸ் மேக்கரில் தர்பூசணி சதைகளை வைக்கவும். சிறிது சர்க்கரை, உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்க வேண்டும். இப்போது, ​​தர்பூசணி கூடு எடுத்து, அதில் ஜூஸை மீண்டும் ஊற்றி, சிறிது எலுமிச்சை மற்றும் புதினா இலைகளை சேர்க்கவும். எலுமிச்சை குடைமிளகாய் அலங்கரித்து அப்படியே பருகலாம். எலுமிச்சை மற்றும் புதினாவின் சுவை தர்பூசணி ஜூஸை ஒருபடி மேலே எடுத்துச் செல்லும். இதனை குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் கொடுக்கலாம். இனிப்பு, புளிப்பு சுவையுடனும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானமாகவும் உங்களுக்கு இது நிச்சயமாக பிடிக்கும். வீட்டிலேயே செய்து பாருங்கள்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய சமையல்

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement