நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பீட்ரூட் சூப் !

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்ளலாம்.  இது உடலில் இரத்த அழுத்தத்தை சீராக வைக்கிறது. 

   |  Updated: January 07, 2019 21:45 IST

Reddit
Weak Immunity? Try Beetroot Soup To Strengthen Immunity This Winter Season

நீங்கள் தொடர்ச்சியாக சளி, இருமல் மற்றும் காய்ச்சலால் அவதிப்பட்டு கொண்டே இருந்தால் உடனடியாக உங்கள் உடல் எதிர்ப்பு சக்தியில் கவனம் செலுத்த வேண்டும்.  குறிப்பாக குளிர்காலத்தில் உடலில் எதிர்ப்பு சக்தி குறைய நேரிடும்.  காரணம் குளிர்காலத்தில் காற்றில் நிறைய நோய் தொற்று கிருமிகள் பரவியிருக்கும்.  இவற்றில் இருந்து தப்பிக்க நீங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறி மற்றும் பழங்களை உணவில் சேர்த்து கொள்வது அவசியம்.  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்ளலாம்.  இது உடலில் இரத்த அழுத்தத்தை சீராக வைக்கிறது.  மேலும் மலச்சிக்கலை போக்குகிறது.  இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது.  பீட்ரூட்டில் ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்திருப்பதால் செரிமான பிரச்சனை, சோர்வு ஆகியவற்றை போக்குகிறது. 

Newsbeep

பீட்ரூட் சூப் எப்படி தயாரிப்பது?

ஆலிவ் எண்ணெய் – 11/2 மேஜைக்கரண்டி

வெங்காயம் – 1 சிறியது

மிளகு தூள்

தேவைக்கேற்ப உப்பு

வெங்காய கீரை – 1, மெல்லிசாக நறுக்கியது

பீட்ரூட் – 2, தோல் நீக்கி துருவியது

கேரட் – 1, துருவியது

பூண்டு – 1

சூடான வெஜிடபிள் ஸ்டாக் – 2 கப்

யோகர்ட் – 1 மேஜைக்கரண்டி

செய்முறை:

ஒரு பெரிய கடாய் எடுத்து, அதில் ஆலிவ் எண்ணெய் சேர்த்து மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.  பின் அதில் நறுக்கி வைத்த வெங்காயம், உப்பு சேர்த்து பொன்னிறமாக வதங்கும் வரை வதக்கவும்.  அத்துடன் வெங்காய கீரையை சேர்க்கவும்.

பின் அதில் மீதமுள்ள காய்கறிகள் மற்றும் பூண்டு சேர்த்து 3-4 நிமிடங்கள் வரை வதக்கவும். 

இப்போது அதில் வெஜிடபிள் ஸ்டாக் சேர்க்கவும்.  அடுப்பை சிம்மில் வைத்து 15 நிமிடங்கள் அல்லது காய்கறிகள் வேகும்வரை வைத்து பின் இறக்கி வைக்கவும். 

Listen to the latest songs, only on JioSaavn.com

இதனை ஒரு பௌலில் ஊற்றி, அதில் சிறிது யோகர்ட் சேர்த்து பரிமாறவும்.

இந்த சூப் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதால் அடிக்கடி இதனை உணவில் சேர்த்து கொள்ளலாம். 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement