உடல் எடையை குறைக்க உதவும் 11 ஈஸி டிப்ஸ்

உடல் எடையை குறைக்க ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொண்டு, உடற் பயிற்சி செய்வது அவசியம் ஆகும்

   |  Updated: August 20, 2018 17:40 IST

Reddit
Weight Loss: 11 Science-Backed Tips You Must Follow To Lose Weight

உடல் எடை குறைப்பதற்கு குறுக்கு வழிகள் எதுவும் இல்லை. உடல் எடையை குறைக்க ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொண்டு, உடற் பயிற்சி செய்வது அவசியம் ஆகும். வழக்கமாக இந்த முறையை பின்பற்றி வந்தால், உடல் எடையை குறைக்கலாம். சாப்பிடும் உணவுகளில் சில கட்டுப்பாடுகளும், பயிற்சிகளும் பின்பற்ற வேண்டும் என்று கூறும் மருத்துவர் தெப்ஜானி பானர்ஜீ, உடல் எடை குறைப்பதற்கான சில டிப்ஸ் வழங்கியுள்ளார்.

1. உணவு எடுத்துக் கொள்ளும் முன்பு, ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பதனால் உடல் எடை அதிகரிப்பதை குறைக்கலாம். உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு, அரை லிட்டர் தண்ணீர் குடிப்பதனால், குறைந்த கலோரி உணவுகளை எடுத்துக் கொள்ள உதவும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsbeep

2. கூடுதலாக சேர்த்துக் கொள்ளப்படும் சர்கரையை தவிர்க்க வேண்டும். இதனால், உடல் பருமன், மற்ற உடல் பாதிப்புகளை தவிர்க்கலாம்.

3. ஜூஸ் குடிப்பதை தவிர்த்து, ஃப்ரெஷ் பழங்களை சாப்பிட வேண்டும். பழங்களில் உள்ள நார்ச்சத்து உடல் ஆரோக்கியத்திற்கு தேவையானது.

4. தினமும், 5 முதல் 6 முறை சாப்பிட வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

low carb diet weight loss

5. அதிக அளவு சோடியம் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

6. க்ரீன் டீயில் உள்ள கெடாசின்ஸ் என்ற பொருள் உடல் ஆற்றலை அதிகரிக்கவும், உடல் எடையை குறைக்கவும் உதவுகின்றன. எனவே, க்ரீன் டீ குடிக்கவும்.

7. அதிக புரதச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

Listen to the latest songs, only on JioSaavn.com

8. டையட்டில் இருந்தால், ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது அவசியமாகும்.

weight loss

ஊட்டச்சத்து நிபுணர் ரித்து அரோரா வழங்கும் எக்ஸ்டிரா டிப்ஸ்

Comments

  1. தினம் காலை எழுத்தவுடன், ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். இப்படி செய்வதனால், உடலில் உள்ள பாக்டீரியா நீங்கும்.
  2. அசிடிட்டி, அஜீரணப் பிரச்சனைகள் இருந்தால், எக்ஸ்டிரா வெர்ஜின் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தவும்.
  3. மாலை 5 மணிக்கு மேல், பச்சை சாலட், பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்கவும்.


உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement