உடல் எடை குறைப்பு: கலோரி குறைவான 3 காய்கறிகள்

குறைவான கலோரியாக இருந்தாலும் நார்ச்சத்து அதிகமுள்ள உணவு செரிமானத்தின் போது உடலில் உள்ள கொழுப்பு சத்துகளையும் கரைக்கும்

Sushmita Sengupta  |  Updated: February 11, 2019 20:37 IST

Reddit
Weight Loss: 3 Low Calorie Vegetables You Must Have While Winter Lasts
Highlights
  • காரட்டில் செரிமானத்தை தூண்டும் நார்ச்சத்து உள்ளது.
  • 30 கிராம் கீரையில் 7 கலோரிகள் மட்டுமே உள்ளது.
  • 100கிராம் முள்ளங்கியில் 16 கலோரிகள் மட்டுமே உள்ளது.

குளிர்காலம் என்றாலே பலவித நோய்களுக்கு இடமளிக்கும் காலமாகவே உள்ளது. குறிப்பாக இந்த வருடம் குளிர்காலம் மிகவும் கடுமையாகவே இருந்தது. குளிர்காலத்திலும் உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்வது மிக முக்கியம். குறைவான கலோரிகள் உடைய உணவினை எடுக்க வேண்டும். குறைவான கலோரியாக இருந்தாலும் நார்ச்சத்து அதிகமுள்ள உணவு செரிமானத்தின் போது உடலில் உள்ள கொழுப்பு சத்துகளையும் கரைக்க வேண்டும். இதனால் குளிர்காலத்தில் சாப்பிட வேண்டிய காய்கறி என்னென்ன என்பதை பார்க்கலாமா...

1. காரட்

உடல் எடை குறைப்புக்கான டயட்டில் என்றும் காரட்டுக்கு ஒரு இடம் நிச்சயம் உண்டு. காரட்டில் செரிமானத்தை தூண்டும் நார்ச்சத்து உள்ளது. நீங்கள் வயிறு நிரம்பியதாக உணர்ந்தால், ஸ்நாக்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகளை சாப்பிட வேண்டும் என்று தோன்றாது. காரட்டை சூப்பிலோ  ஸ்டீயூ வைத்தோ அல்லது ஸ்மூத்தியிலோ சேர்த்துக் கொள்ளலாம். காரட்டை ஜூஸாக குடிக்கலாம். 

 

carrots 620x350

 

2. கீரை 

பசுமையான கீரையில் ஆண்டியாக்ஸிடன்ஸ் மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்தது. கீரையில் வைட்டமின் கே, வைட்டமின் ஏ, இரும்பு, பொட்டாசியம் ஆகிய சத்துகள் நிறைந்துள்ளன. இதில் கலோரிகளின் மிகவும் குறைவு. 30 கிராம் கீரையில் 7 கலோரிகள் மட்டுமே உள்ளது. கீரையை ஜுஸாகவோ அல்லது சூப்களில் சேர்த்தோ சாப்பிடலாம். தற்போது சாலட்களிலும் பயன்படுத்தப்படுகிறது. பல ஊட்டச்சத்து நிபுணர்களை கீரைகளை பரிந்துரைக்கின்றனர்.

spinach

 

3. முள்ளங்கி

முள்ளங்கி ஒரு குளிர்காலத்திற்கு ஏற்ற காய்கறி. மொறுமொறுப்பான இந்த காய்கறி அதிக வாசனையுடன் இருக்கும். இதை பரோட்டா மற்றும் சாலட்களில் பயன்படுத்தலாம். முள்ளங்கி இருமல், சளி மற்றும் ஹைபர்டென்சனுக்கு எதிராக செயல்படக்கூடியது. இதில் பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் பி விட்டமின் நிறைந்தது. 100கிராம் முள்ளங்கியில் 16 கலோரிகள் மட்டுமே உள்ளது.  

radish

இதை அன்றாட உணவுகளில் எடுத்துக் கொள்ளுங்கள் மாற்றங்களை நீங்களே பாருங்கள்

Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information.


 

Comments

About Sushmita SenguptaSharing a strong penchant for food, Sushmita loves all things good, cheesy and greasy. Her other favourite pastime activities other than discussing food includes, reading, watching movies and binge-watching TV shows.

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com