வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் 5 உணவுகள்

விரைவான வளர்சிதை மாற்றம் உடல் எடையை விரைவாக குறைக்க உதவுகிறது.

एनडीटीवी फूड डेस्क  |  Updated: February 11, 2019 20:35 IST

Reddit
Weight Loss: 5 Foods That May Help Fire Up Metabolism Naturally

உடல் எடை குறைப்பில் வளர்சிதை மாற்றத்திற்கு மிக முக்கிய இடமுண்டு. வளர்சிதை மாற்றம் என்பது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. விரைவான வளர்சிதை மாற்றம் உடல் எடையை விரைவாக குறைக்க உதவுகிறது. சிலர் இந்த வரத்தினை இயல்பாக பெற்றுள்ளனர் அதனால்தான் அவர்களின் உடல் எடை எப்போதும் ஒரேபோல் உள்ளது. இதோ வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும் 5 உணவு பொருள் என்னென்ன என்பதை பார்க்கலாமா...

1. மிளகு

மிளகில் பைபெரின் (piperine) நிறைந்தது. மிளகில் உள்ள பைபெரின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கக் கூடியது. உடலில் கொழுப்பு தங்குவதை தடுக்கிறது. மிளகில் உள்ள வெளிப்புற அடுக்கு கொழுப்பு செல்களை கரைக்க உதவுகிறது. 

2. முட்டை

சில ஆய்வுகள் விட்டமின் டி குறைபாடு உள்ளவர்களுக்கு வளர்சிதை மாற்றம் குறைவாக இருக்கும். வைட்டமின் டி முட்டையில் அதிகமாக உள்ளது. மேலும் முட்டையில் புரதச்சத்து அதிகமுள்ளத்து. புரதச்சத்து கூடுதலாக சாப்பிடத்தோன்றும் உணர்வை கட்டுப்படுத்துகிறது. 
 

on8tt8so

 

3. க்ரீன் டீ

க்ரீன் டீயில் ஆண்டியாக்ஸிடன்ஸ் நிறைந்துள்ளது. இது இயல்பாகவே வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது. உடலின் கொழுப்பை கரைக்கும் தன்மை க்ரீன் டீயில் அதிகமாகவே உள்ளது. க்ரீன் டீயில் லெமன் கலந்தும் குடிக்கலாம்.
 

4. பால்

 பாலில் கால்சியம் மற்றும் புரோட்டின் நிரம்பியுள்ளது. வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கக் கூடிய பால் நிச்சயமாக உங்களின் டயட்டில் இருக்க வேண்டிய ஒன்று. பாலில் புரோட்டின் விட்டமின் ஏ, பி1,பி2,பி12,டி, கால்சியம், பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் நிறைந்துள்ளது.

 

u0bed5e

 

5. மீன்

 கொழுப்பு சத்துள்ள மீன்களான சாலமன், ட்யூனா போன்ற 'ஒமேகா 3' உள்ள மீன்களை சாப்பிடலாம். இதில் புரோட்டீன் விட்டமின் டி ஆகியவை நிரம்பியுள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உடலில் உள்ள கொழுப்பை கரைக்கிறது.
 

Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information.
 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement