உடல் எடை குறைக்க உதவும் 'முட்டை': சில நிமிடங்களில் செய்ய 5 ரெசிபிகள்!

அந்த வகையில், முட்டையை வைத்துக் கொண்டே எண்ணெய் இல்லாத 5 ரெசிபிகளைக் குறித்து இங்குப் பார்ப்போம்.

  |  Updated: July 21, 2020 16:39 IST

Reddit
Weight Loss Diet: 5 Oil-Free Egg Recipes You Can Try For Protein-Rich Breakfast

Egg Recipes for Weight Loss: உணவுக் கட்டுபாட்டில் இருப்பவர்கள் தங்களுக்குத் தேவையான புரோட்டீன் சத்துக்களை முட்டையில் இருந்து பெற முடியும்.

Highlights
  • 10 நிமிடத்தில் 5 ரெசிபிகள்
  • உடல் எடை குறைப்பதற்கு உகந்தது
  • புரோட்டீன் மிகுந்தது, சுவையானது, ஆரோக்கியமானது.

நீங்கள் உடல் எடை குறைப்பதற்காக டயட்டில் இருக்கிறீர்களா? அப்படியென்றால் எண்ணெய் இல்லாத உணவுகளைத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், அன்றாட சமையலில் எண்ணெய் இல்லாமல் ஒரு வெண்டைக்காய் பொரியல் கூட செய்ய முடியாது. இதனால் பெரும்பாலானோர் டயட்டில் இருந்தாலும், சிறிதளவு எண்ணெய் சேர்த்து வருகிறார்கள். இருப்பினும் எண்ணெய், வெண்ணெய் இல்லாத சில உணவு வகைகளும் உள்ளன. அவை பெரும்பாலானோருக்குத் தெரிவதில்லை. 

அந்த வகையில், முட்டையை வைத்துக் கொண்டே எண்ணெய் இல்லாத 5 ரெசிபிகளைக் குறித்து இங்குப் பார்ப்போம். இதில் எண்ணெய் சேர்க்கப்படாததால், உங்கள் ஆரோக்கியத்துக்கு உகந்ததாகும். மேலும், உணவுக் கட்டுபாட்டில் இருப்பவர்கள் தங்களுக்குத் தேவையான புரோட்டீன் சத்துக்களை முட்டையில் இருந்து பெற முடியும்.

1. அவித்த முட்டை / டெவில்டு முட்டை

எண்ணெய் இல்லாத முட்டை என்றால் அனைவருக்கும் அவித்த முட்டைதான் ஞாபகத்திற்கு வரும். ஆனால், வெறும் அவித்த முட்டை மட்டும் சாப்பிட்டால் சிலருக்குப் பிடிக்காது. அவர்களுக்கானது தான் டெவில்டு முட்டை. இதை மிக எளிதாக செய்யலாம். அவித்த முட்டையை இரண்டாக வெட்டி, மஞ்சள் கருவை அகற்ற வேண்டும். பின்பு அந்த குழிக்குள் கொத்தமல்லி, பனீர், மசாலாப் பொருட்கள் ஆகியவற்றை சேர்த்து வைத்து அலங்கரித்துச் சாப்பிடலாம். இப்படியான மசாலா சுவையாக இருக்கும்.

2. போச்சடு முட்டை:

இது கிட்டத்தட்ட ஹாஃப் பாயில் போன்றது. ஆனால் வித்தியாசமானது. முதலில் முட்டையை அப்படியே உடைத்து, மஞ்சள் கரு சிதறாமல் உடையாமல் ஒரு கிண்ணத்தில் ஊற்ற வேண்டும். பின்பு, ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் சிறிது வினிகர், உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். கொதிநிலையில் இருக்கும் போது, கிண்ணத்தில் இருக்கும் முட்டையை அப்படியே ஊற்ற வேண்டும். மஞ்சள் கருவின் மேல் வெள்ளைப் படலத்தைக் கொண்டு மூடிவிட வேண்டும். 5-7 நிமிடங்கள் கழித்து எடுத்து விடலாம். இதன் மூலம் வெள்ளைக் கரு நன்கு வெந்து விடும், மஞ்சள் கரு அரை வெந்ததாக, அப்படியே இருக்கும். 

(Also Read: 9 Tips To Make a Perfectly Poached Egg)

tmsf4c5o

வெந்த வெள்ளைக் கரு, வேகாத மஞ்சள் கரு. வித்தியாசமாகன சுவையான ரெசிபி. 


3. சுட்ட முட்டை:

சுட்ட முட்டை சிலருக்கு தெரிந்திருக்கும். ஒரு கண்ணாடி பவுலில் முட்டை உடைத்து ஊற்றி அத்துடன் உப்பு, மெல்லிசாக நறுக்கிய வெங்காயம், தக்காளி மற்ற மசாலாப் பொருட்களைச் சேர்த்து கலக்க வேண்டும். பின்பு ஓவனில் 5-10 நிமிடம் வைத்து எடுத்தால் போதும். சுட்ட முட்டை ரெடி.

(Also Read: Looking For Unique Yet Quick Eggs Recipe? Make Turkish Eggs)

5dd13shg

எண்ணெய் இல்லாத முட்டை ரெசிபி

Listen to the latest songs, only on JioSaavn.com


4. வேகவைத்த ஆம்லேட்

எண்ணெய்யுடனும் வெண்ணெய்  இல்லாமலும் ஆம்லேட் செய்ய முடியும். கொதிக்கும் நீரில் சிறிது வினிகர், முட்டை ஊற்ற வேண்டும். அப்படியே வெந்து மிதக்கும். அதை எடுத்து மேலே மிளகாய்த் தூள், பச்சைமிளகாய்த் துண்டுகள், உப்பு, கொத்தமல்லி இலை தூவ வேண்டும். எண்ணெய் இல்லாத ஆம்லேட் ரெடி.
 

5. முட்டைப் பொரியல்:

எண்ணெய் இல்லாமல் பொரியலா? ஆம். எண்ணெய் இல்லாத பொரியல்தான். எண்ணெய்க்குப் பதிலாக பால் மற்றும் சிறிது வினிகர் இருந்தால் போதும். மூன்றையும் சேர்த்து கலக்கி, அப்படியே மிதமான சூட்டில் கடாயில் கிளரிவிட்டால் முட்டை பொரியல் ரெடி.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement