உடலைக் குறைக்க வெள்ளரி-லெமன் டீடாக்ஸ் ட்ரிங்ஸ்!

Edited by: Kamala Thavanidhi  |  Updated: March 28, 2019 17:48 IST

Reddit
Weight Loss: Drink This Classic Cucumber Lemon Detox Water To Shed Kilos

உங்கள் மனதில் உடல் எடையைக் குறைத்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் ஓடிக்கொண்டே இருக்கிறதா? அப்பொழுது நீங்கள் நிச்சயம் குடிக்க வேண்டியது இந்த டீடாக்ஸ் ட்ரிங்ஸ். டீடாக்ஸ் ட்ரிங்ஸ் என்றால் செலவு அதிகம் என்று பயப்பட வேண்டாம். நீங்கள் வீட்டிலேயே செய்து குடிக்கலாம். இதற்குத் தேவை வெள்ளரி மற்றும் எலுமிச்சை.

'Healing Foods' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளபடி வெள்ளரி நீர்ச்சத்து நிரம்பியது. இதில் வைட்டமின்கள், மினரல்கள் உடலுக்குப் புத்துணர்ச்சியை தரக்கூடிய எலக்ட்ரோலைட்கள் உள்ளது. இதில் உள்ள என்சைம்கள் எளிதில் செரிமானம் ஆகிவிடக்கூடியதால் உடல் எடை குறைப்பில் பெரும் பங்கு வகிக்கிறது. 

வெள்ளரி மற்றும் லெமன் ஜூஸ் குடிப்பதால் உடலுக்குத் தேவையான எனர்ஜி உடனே கிடைக்கிறது. லெமனில் உள்ள அமிலங்கள் செரிமானதுக்கு உதவி, டீடாக்ஸ் செய்கிறது. 

இந்த ஜூஸை தினமும் காலையில் குடித்துவந்தால் நிச்சயம் உடல் எடை குறைப்பில் நல்ல பலன் கிடைக்கும். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இதுதான். ஒரு வெள்ளரியை நறுக்கி அதில் எலுமிச்சை சாறு பிழிந்து அதனுடன் தண்ணிர் சேர்த்து சிறிது நேரம் கழித்துக் குடிக்க வேண்டும்.

இதை நீங்கள் அதிகாலையிலும் குடிக்கலாம் அல்லது அலுவலகத்துக்கு எடுத்துச் சென்று கொஞ்சம் கொஞ்சமாகவும் குடிக்கலாம். இதில் இன்னும் பெருஞ்சீரகம், மிளகு மற்றும் புதினா சேர்த்தால் இன்னும் நல்லது.

இந்த ஈஸியான வீட்டிலேயே செய்யக்கூடிய டீடாக்ஸ் ட்ரிங்ஸை குடித்து உடல் எடையைக் குறைத்து ஸ்லிம்மாக வலம் வாருங்கள்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement