இரவு தூங்குவதற்கு முன் இந்த ஜூஸைக் குடிங்க: உடல் எடை தன்னாலே குறையும்...!

வெள்ளரிக்காய், கொத்தமல்லி, எழுமிச்சை,இஞ்சி செரிமானத்தை வெகுவாகத் தூண்டுகிறது. இதனால் உணவினை வேகமாக செரிமானம் ஆவதால்  நிம்மதியான தூக்கமும் நமக்கு கிட்டுகிறது. 

Edited by: Saroja  |  Updated: May 13, 2019 12:35 IST

Reddit
Weight Loss: Drink This Wonder Juice At Bedtime And See Your Belly Fat Melting
Highlights
  • வெள்ளரிக்காய் மற்றும் கொத்தமல்லி கலந்த ஜூஸ் கொழுப்பினை குறைக்கிறது
  • தூங்குவதற்கு முன் இந்த ஜூஸைக் குடிக்க வேண்டும்
  • வெள்ளரிக்காயில் நீர்சத்தும் நார்ச்சத்தும் உள்ளது.

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஃபிட் உடல் மிகவும் அவசியம். நீண்ட நேரம் வியர்க்க வியர்க்க உடற்பயிற்சி செய்து உடல் எடையைக் குறைத்தாலும் இடுப்பில் உள்ள கொழுப்பைக் குறைக்க படாத பாடு படவைக்க வேண்டியதிருக்கும். முறையான உணவுப் பழக்கம் இல்லையென்றால் ஃபெல்லி ஃபேட்டை குறைக்கவே முடியாது. எண்ணெய்யில் பொரித்த சீஸ் அதிகமுள்ள, கலோரி அதிகமுள்ள உள்ள உணவுகள் சாப்பிட மகிழ்ச்சியாக இருந்தாலும் இடுப்பின் கொழுப்பின் அளவை வெகுவாக அதிகரிக்கிறது. முறையான உணவுபழக்கம் இன்றி உடற்பயிற்சி மட்டும் கொழுப்பின் அளவைக் குறைக்காது. கொழுப்பு அளவைக் குறைக்க சுவையான ஜூஸ் ரெசிபியை உங்களுக்கு கொடுக்கிறது NDTV Food.

வெள்ளரிக்காய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து செய்யப்படும் ஜூஸ் உடல் எடை குறைப்பு முயற்சிக்கு அவசியம் தேவையான ஒன்று. உடல் எடை குறைப்பு பயணத்தில் அன்றாடம் இதை எடுத்துக் கொள்ளும் போது இதனால் வரும் மாற்றத்தை உங்களால் உணர முடியும். இடுப்பு சதையை குறைக்க எண்ணுகிறவர்கள் இரவில் தூங்குவதற்கு முன்பு வெள்ளரிக்காய் மற்றும் கொத்தமல்லி ஜூஸினை தொடர்ந்து குடித்து பாருங்கள் அதனால் வரும் மாற்றங்களைக் கண்டு அசந்து போய் விடுவீர்கள்.6s3rg2jgவெள்ளரிக்காய் மற்றும் கொத்தமல்லி அட்டகாசமான காம்பினேஷன்

வெள்ளரிக்காய் மற்றும் கொத்தமல்லி இரண்டும் ஆரோக்கியத்தை கொடுக்கும் காய்கறிகள். உடல் எடை குறைப்புக்கு இது வெகுவாக உதவுகிறது.  வெள்ளரிக்காயில் அதிக கலோரிகள் இல்லை. உடல் எடை குறைப்புக்கு இது மிகவும் அவசியமாகிறது. 

வெள்ளரிக்காயில் அதிகளவு நீரும் நார்ச்சத்தும் உள்ளது. கிட்டத்தட்ட எந்தவொரு கலோரியும் இல்லை. ஒரு வெள்ளரிக்காயில்  45 கலோரிகள் மட்டுமே உள்ளது. செரிமானத்தின் போது உடலில் கூடுதல் கலோரிகளை எரிக்க உதவுகிறது. 

கொத்தமல்லியில் அதிகளவு மினரல்ஸ் மற்றும் விட்டமின்கள் அதிகமுள்ளது. ஜூஸ், சாலட்டிற்கு கூடுதல் சுவையை  சேர்க்க மட்டும் கொத்தமல்லி உதவுவதில்லை மாறாக உடல் நீர்ச்சத்தை வற்றாமல் வைத்துக் கொள்ளவும் உடலுக்கு தேவையான கொழுப்பை தக்கவைக்கவும் உதவுகிறது. 9eh8s5tவெள்ளரிக்காய் - கொத்தமல்லி ஜூஸ் செய்முறைதேவையான பொருட்கள் 

ஒரு வெள்ளரிக்காய்  நறுக்கியது

ஒரு கட்டு கொத்தமல்லி

அரை ஸ்பூன் இஞ்சி

1 டீஸ்பூன் லெமன் ஜூஸ்

தேவையான பொருட்களை மிக்ஸியில் சேர்த்து ஜூஸாக நன்றாக அடித்துக் கொள்ளவும். 

இந்த ஜூஸ் உடல் எடையை வெகுவாக குறைக்கும். இந்த ஜூஸினை இரவு தூங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு இரவு உணவு சாப்பிட்டதற்கு பின்  குடிக்கலாம். உடல் எடை குறைவதை கண் கூடாக பார்க்கலாம். qpkavdn8நம்முடைய வளர்சிதை மாற்றம் இரவில் குறைவாக இருக்கும். அதனால் இரவு உணவு அளவாகவும் எளிதாகவும் இருக்கும் விதமாக எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறோம். நம்முடைய செரிமான அமைப்பு நாள் முழுவதும் ஒரேபோல் இருப்பதில்லை.

வெள்ளரிக்காய், கொத்தமல்லி, எழுமிச்சை,இஞ்சி செரிமானத்தை வெகுவாகத் தூண்டுகிறது. இதனால் உணவினை வேகமாக செரிமானம் ஆவதால்  நிம்மதியான தூக்கமும் நமக்கு கிட்டுகிறது. 

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement