உடல் எடை குறைக்க சீக்ரெட் டிப்ஸ்!

கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்பு என அனைத்து சத்துக்களும் நிறைந்த உணவுகளை தினசரி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்

एनडीटीवी फूड डेस्क  |  Updated: December 19, 2018 10:57 IST

Reddit
Weight Loss: 5 Secret Weight Loss Tips No One Told You About

கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்பு என அனைத்து சத்துக்களும் நிறைந்த உணவுகளை தினசரி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். உங்கள் வாழ்வியல் முறை, உணவு பழக்கம், வளர்சிதை மாற்றம் ஆகியவை பொருத்தும் உடல் எடையில் மாற்றம் இருக்கும். உடல் எடையை குறைக்க சில எளிய குறிப்புகளை பார்ப்போம்.

சிறிய தட்டில் சாப்பிடுங்கள்
பெரிய தட்டில் சாப்பிடும்போது உணவு குறைவாக இருப்பதாகவே தோன்றும். இதனால் நிறைய சாப்பிட நேரிடும். முடிந்தவரையில் சிறிய தட்டுக்களையே சாப்பிடுவதற்கு பயன்படுத்துங்கள்.

ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்
மொருமொருப்பான மற்றும் எண்ணெய் அதிகம் உள்ள துரித உணவுகள் மற்றும் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை தவிர்க்கவும். இவற்றில் உடல் பருமனை அதிகரிக்கும் பொருட்கள் சேர்க்கப்படுகிறது.
 

gbbcqgd

நீர்ச்சத்து அவசியம்
உடலுக்கு நீர்ச்சத்து மிகவும் அவசியமானது. ஆரோக்கிய பானங்கள் மற்றும் எலுமிச்சை சாறு, இஞ்சி சாறு, பெருங்காய சேர்த்த நீர் ஆகியவற்றை அருந்திவந்தால் உடலில் வளர்சிதை மாற்றம் அதிகரித்து உடல் பருமனாகாமல் இருக்கும்.

பழங்கள் சாப்பிடலாம்
பழங்களில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அப்படியே சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. ஜீரணம் சீராக இருக்கும். மலச்சிக்கல் ஏற்படாது. பழச்சாறுகளில் சர்க்கரை அளவு அதிகம் என்பதால் உடல் எடை அதிகரிக்கும்.
 

e0chtlgo
 

 

உப்பு பயன்பாட்டை குறைக்க வேண்டும்
உடலில் அதிகபடியாக சோடியம் சேர்ந்தால் நீரிழப்பு ஏற்படும். மாலை நேரத்தில் உடலில் வளர்சிதை மாற்றம் குறைந்துவிடும். அதனால் ஏழு மணிக்கு மேல் உப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement