உடல் எடை குறைக்க : ஏலக்காய் தண்ணீரின் நன்மைகளை அறிவோமா…!

தினமும் காலையில் ஏலக்காய் தண்ணீரை குடித்து வந்தால் வளர்சிதை மாற்றம் வெகுவாக அதிகரிப்பதை பார்க்க முடியும். வளர்சிதை மாற்றம் உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏலக்காய் தண்ணீர் இதை திறம்பட அதிகரிக்கவும் செய்கிறது.

   |  Updated: May 17, 2019 14:47 IST

Reddit
Weight Loss: Here's How Cardamom (Elaichi) Water May Help You Lose Stubborn Belly Fat
Highlights
  • இந்திய உணவில் ஏலக்காய்க்கு தனியிடமுண்டு
  • ஏலக்காய் நறுமணம் மிக்க மசாலா பொருள்
  • ஏலக்காயில் மருத்துவ பலன்களும் உண்டு

இந்திய வீட்டு சமையலறைகளில் பல்வேறு உணவுகளிலும் சுவையையும் வாசனையும் சேர்க்க பயன்படுத்தப்படுவது ஏலக்காய் மட்டுமே. ஏலக்காயில் மருத்துவ குணங்களும் உண்டு. ஏலக்காயினை குழம்பு வகைகள், அரிசி உணவுகள், குளிர்ச்சியான மற்றும் சூடான பானங்கள் மற்றும் இனிப்புகளிலும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. 

ஏலக்காயின் மருத்துவ குணங்களைப் பெறவிரும்பினால், அதை தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை குடிப்பது நல்லது. நறுமணம் மிக்க ஏலக்காயில் பல அத்தியாவசியமான எண்ணெய்கள் உள்ளது. இது இடுப்பைச் சுற்றி உள்ள கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. இதனால் கூடுதலாக உடல் எடை குறைக்க முடிகிறது.

Newsbeep

டிகே பப்ளிஷிங் ஹவுஸ்  வெளியிட்ட ‘ஹீலிங் ஃபுட்ஸ்' என்ற புத்தகத்தில் “ஏலக்காய் செரிமான சக்தியை தூண்டி வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. நீங்கள் அஜீரணச் சிக்கலினால் அதிகம் பாதிக்கப்படும் நபர் என்றால் ஏலக்காய் தண்ணீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏலக்காயில் உள்ள ஆண்டியாக்ஸிடன்ஸ் செரிமானத்தை அதிகரிக்கச் செய்கிறது. செரிமான செயல்பாட்டுமுறை சரியாக நடந்தாலே உடலில் உள்ள கழிவுகள் முறையாக வெளியேறிவிடும்.

5jhhmuag

தினமும் காலையில் ஏலக்காய் தண்ணீரை குடித்து வந்தால் வளர்சிதை மாற்றம் வெகுவாக அதிகரிப்பதை பார்க்க முடியும். வளர்சிதை மாற்றம் உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏலக்காய் தண்ணீர் இதை திறம்பட அதிகரிக்கவும் செய்கிறது. 

ஏலக்காய் தண்ணீர் செய்முறை

தேவையான பொருட்கள்

4-5 ஏலக்காய்

1 டம்ளர் தண்ணீர்

செய்முறை

ஏலக்காயைத் தட்டி அதிலிருந்து விதைகளை தனியாக எடுத்து வைக்கவும்.

தண்ணீரில் ஏலக்காய் விதை மற்றும் தோலை இரவு முழுவதும் ஊறவைக்கவும்.

Listen to the latest songs, only on JioSaavn.com

காலையில் ஏலக்காய் தண்ணீரை அருந்தலாம். விதை சாப்பிட விரும்பவில்லையென்றால் வடிகட்டி நீரை மட்டும் அருந்தலாம். ஆரோக்கியமான முறையில் உடல் எடை குறைக்கவும் அன்றாடம் உடற்பயிற்சியுடன் ஏலக்காய் தண்ணீர் குடிக்கும் வழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உடல் எடை குறைப்பு முயற்சியை எளிதாக்கலாம். 

Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement