சக்கரை வள்ளிக் கிழங்கு உடல் எடையை குறைக்குமா!

சுவையை விட்டு கொடுக்காமல் உடல் இடையை குறைக்கலாம்; வைட்டமின் சி, கால்சியம், பீட்டா கரோட்டின் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளது.

   |  Updated: June 11, 2018 15:51 IST

Reddit
Weight Loss: How Eating Sweet Potatoes May Help You Lose Weight
Highlights
  • சக்கரை வள்ளிக் கிழங்கு கார்போ ஹைடிரேட் தேவையை பூர்த்தி செய்யும்
  • இது அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது
  • அதிக நார்சத்து கொண்டுள்ளது
சக்கரை வள்ளிக் கிழங்கில் சுவை மட்டுமில்லாமல் உடலுக்கான நன்மைகள் அதிகமாக இருக்கிறது. அதுமட்டுமின்றி உடல் பருமனை குறைக்க மிகவும் உதவும் கிழங்கு. சுவையை விட்டு கொடுக்காமல் உடல் எடையை குறைக்கலாம், பலர் விரும்புவதும் இதுதான். வைட்டமின் சி, கால்சியம், பீட்டா கரோட்டின் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் போன்ற சத்துக்கள் இந்த கிழங்கில் உள்ளது.
 
weight loss


உடல் எடையை குறைக்கும் சக்கரை வள்ளிக் கிழங்கின் நன்மைகள் 

1. நார்ச்சத்து நிறைந்தது 

உடல் எடையை குறைக்க நார்ச்சத்து மிகவும் அவசிய, மேலும் அது சக்கரை நோயை கட்டுப்படுத்த உதவும். அதிக நார்ச்சத்து உள்ளதால் இதில் நாம் திருப்த்தியாக சாப்பிட்ட உணவை கொடுக்கும். மேலும் நம் பசியை கட்டுப்படுத்தி அதிகம் சாப்பிட விடாமல் தடுக்கும்.

2. குறைந்த கலோரி உணவு 

உடல் எடையை குறைக்க முக்கியமாக தேவைப்படும் உணவு குறைந்த கலோரி உணவு. அதனால் குறைந்த கலோரி உள்ள சக்கரை வள்ளிக் கிழங்கை பசிக்கும் பொழுது எண்ணெய் பலகாரத்திற்கு பதில் உண்டால் பசியும் தீரும், உடல் பருமனும் ஆகாது. எண்ணெயில் வறுத்து உண்ணாமல், வேகவைத்து அல்லது சுட்டு சாப்பிட்டால் நல்லது.
 

sweet potato


3. அதிக நீர் சத்து உடையது 

Listen to the latest songs, only on JioSaavn.com

நார்ச்சத்துடன் நீர் சத்தும் இருப்பதால் நம்மை அதிக நேரம் நிறைவாக வைக்கும். எனவே உடலை குறைக்க இது சிறந்த உணவு. 

4. குறைந்த கிளைசெமிக் உள்ளது

Commentsஅதிக கிளைசெமிக்  உடலில் இருந்தால் ரத்தத்தின் சக்கரை அளவை அதிகரிக்கும், அதனால் உடல் எடையும் அதிகரிக்கும். ஆனால் சக்கரை வள்ளிக் கிழங்கு இனிப்பு சுவையை கொடுப்பதோடு கிளைசெமிக்  அளவையும் கட்டுப்பாட்டில் வைக்கிறது.
 

sweet potatoes 620

உங்கள் தினசரி உணவில் சக்கரைவள்ளிக் கிழங்கை இணைப்பது எப்படி?


ஹீலிங் ஃபூட்ஸ் என்ற புத்தகம் படி, வறுத்தலை விட வேகவைத்தல் அல்லது கொதித்தல், மெதுவாக வெளியிடும் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைப் பாதுகாக்கிறது. உங்கள் சாலடில் இணைத்தோ அல்லது வெறும் வேகவைத்து அப்படியே உண்ணலாம். 

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement