பாதாம் சேர்க்கப்பட்ட ரெசிபிகளை சாப்பிட்டு உடல் எடை குறைக்கலாம்!!

முழுகோதுமை, ஓட்ஸ், பாதாம், ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ் ஆகியவை சேர்த்து புரோட்டீன் பார் தயாரிக்கலாம்.  பசி நேரத்தில் இதனை சாப்பிட்டு வரலாம். 

  |  Updated: September 13, 2019 12:23 IST

Reddit
Almond For Weight Loss: Include These Three Almond-Based Recipes In Your Diet To Manage Weight

தினமும் காலையில் ஊறவைத்த பாதாமை ஒரு கைப்பிடி சாப்பிட்டு வந்தால் ஞாபகத்திறன் அதிகரிக்கும்.  பாதாமில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருப்பதால் ஷேக்ஸ், சாலட், டெசர்ட் ரெசிபிகளில் சேர்த்து சாப்பிடலாம்.  பாதாமில் மக்னீஷியம், வைட்டமின் ஈ, காப்பர், கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்தும் இருக்கிறது.  பாதாமை தோல் நீக்கி சாப்பிட்டால் அதன் ஆரோக்கிய நன்மைகள் அதிகரிக்கும்.  மேலும் ஊறவைக்கும்போது அதில் இருக்கும் லிப்பேஸ் என்னும் என்சைம் செரிமானத்தை சீராக வைக்க உதவுகிறது.  பாதாம் சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய மேலும் சில நன்மைகளை பார்ப்போம்.  

1. பாதாமில் சிங்க், மக்னீஷியம், பொட்டாஷியம், ஆண்டிஆக்ஸிடண்ட், வைட்டமின் ஈ ஆகிய சத்துக்கள் இருப்பதால் மூளை, இருதயம் மற்றும் சுவாச மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.  

Newsbeep

2. உடலுக்கு தேவையான நார்ச்சத்து இருப்பதால் இரத்த சர்க்கரை அளவையும் சீராக வைக்கிறது.  நீரிழிவு நோயாளிகள் தினமும் பாதாம் சாப்பிட்டு வரலாம்.  பாதாம் செரிப்பதற்கு நீண்ட நேரம் எடுக்கும் என்பதால் இரத்தத்தில் சர்க்கரை தாமதமாக கலக்கிறது.  

ks3e5n9g
 

3. பாதாமில் புரதம் இருப்பதால் நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும்.  பசியை தூண்டக்கூடிய க்ரெலின் என்னும் ஹார்மோனை சீராக வைத்து உடல் எடையை குறைக்கிறது.  பாதாம் சேர்த்து செய்யப்படும் ரெசிபிகள் சிலவற்றை பார்ப்போம்.   

almond granola bar
 

1. ப்ரோக்கோலி மற்றும் பாதாம் சூப்: 
பாதாம் மற்றும் ப்ரோக்கோலியில் உடலுக்கு தேவையான சத்துகள் இருக்கிறது.  மாலை நேரத்தில் இந்த சூப் செய்து குடிக்கலாம்.  
 

Listen to the latest songs, only on JioSaavn.com

banana and almond porridge
 

2. பாதாம் கிரானோலா பார்: 
முழுகோதுமை, ஓட்ஸ், பாதாம், ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ் ஆகியவை சேர்த்து புரோட்டீன் பார் தயாரிக்கலாம்.  பசி நேரத்தில் இதனை சாப்பிட்டு வரலாம். 

3. வாழைப்பழம் மற்றும் பாதாம் கூழ்: 
ஓட்ஸ், சியா விதை, பாதாம், பேரிச்சை, பட்டை மற்றும் குங்குமப்பூ சேர்த்து ருசியான கூழ் தயாரித்து குடிக்கலாம்.  
 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

சம்பந்தமுள்ள கட்டுரைகள்:
Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement