மைதாவிற்கு பதில் வெள்ளை சோளம் பயன்படுத்தலாம்!!

க்ளூட்டன் ஃப்ரீ உணவுகளை சாப்பிடும்போதுதான் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும்.

Edited by: Kamala Thavanidhi  |  Updated: May 22, 2019 14:39 IST

Reddit
Weight Loss: Replace Your Maida Naan With These Fibre-Rich Jowar Rotis To Shed Kilos
Highlights
  • உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் தன்மை மைதாவிற்கு உண்டு.
  • உடல் எடை குறைக்க மைதாவை தவிர்க்க வேண்டும்.
  • வெள்ளை சோளத்தில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது.

உடலுக்கு உகந்த உணவு பொருட்களை இயற்கையே உருவாக்கியிருக்கிறது.  சோளம், கோதுமை, வரகு, சாமை, தினை போன்ற மாவு பொருட்களில் ஆரோக்கியம் நிறைந்துள்ளது.  இவற்றை தினசரி உணவில் சேர்த்து கொண்டாலே போதும்.  ஸ்லிம்மாக தோற்றமளிக்கலாம்.  பூரி, சப்பாத்தி, நாண் மற்றும் பட்டூரா போன்றவற்றை மைதா மாவில் தயார் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.  மைதா உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கக்கூடியது.  மேலும் உடல் எடையை அதிகரிக்க செய்யும் உணவு பொருள் மைதா.  அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் மைதா முழுவதுமாக செரிப்பதற்கு நீண்ட நேரம் எடுக்கும் என்று தெரியவந்துள்ளது.  இதனால் செரிமான பிரச்சனை, மலச்சிக்கல் போன்றவை ஏற்படுகின்றன.  உடல் எடை குறைக்க நினைத்தீர்களானால், நிச்சயமாக உணவில் மைதாவை தவிர்க்க வேண்டும்.  ஆகவே, மைதாவிற்கு பதிலாக வெள்ளை சோளத்தை பயன்படுத்தலாம்.  ருசி மற்றும் ஆரோக்கியம் நிறைந்தது வெள்ளை சோளம்.  நார்ச்சத்து நிறைந்த இந்த வெள்ளை சோளத்தில் சப்பாத்தி செய்து சாப்பிடலாம்.  இதனால் செரிமான மண்டலம், குடல் பகுதி ஆரோக்கியமாக இருக்கும்.  உடல் எடை குறைக்க ஆரோக்கிய நிபுணர்களின் பரிந்துரையில் இருக்கிறது வெள்ளை சோளம்.  

 


 

வெள்ளை சோளத்தில் ரொட்டி செய்வது எப்படி என்று பார்ப்போம்.  க்ளூட்டன் ஃப்ரீ உணவுகளை சாப்பிடும்போதுதான் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும். அரிசி மாவு மற்றும் வெள்ளை சோளம் சேர்த்து ருசியான உணவு பதார்த்தத்தை எப்படி தயார் செய்வது என்று பார்ப்போம்.  ஒரு கப் வெள்ளை சோளமாவு மற்றும் கால் பங்கு அரிசி மாவு மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.  சில நிமிடங்களுக்கு பிறகு தேய்த்து தோசை கல்லில் போட்டு எடுக்கவும். உங்கள் விருப்பத்திற்கேற்ப சம்ஜி அல்லது சட்னியுடன் சேர்த்து சாப்பிடலாம்.  இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி ஆரோக்கியமாக இருக்க செய்கிறது.  மேலும் நார்ச்சத்து மிகுதியால் உடல் எடை குறைகிறது.  

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement