மைதா சேர்க்கப்படாத டம்ப்ளிங்ஸ் சாப்பிட்டிருக்கிறீர்களா??

மைதா தவிர்த்து முட்டைக்கோஸ் கொண்டு சிக்கன் டம்ப்ளிங் தயாரிக்கலாம்.

Translated by: Kamala Thavanidhi  |  Updated: July 15, 2019 13:10 IST

Reddit
Keto Diet For Weight Loss: These Keto-Friendly Chicken Dumplings Are Completely Maida-Free
Highlights
  • மோமோஸ் ரெசிபி பொதுவாக மைதாவில் தயாரிக்கப்படுவது தான்.
  • சிக்கன், காய்கறிகள் போன்றவை சேர்த்து மோமோஸ் தயாரிக்கலாம்.
  • மைதா சேர்க்காமல் மோமோஸ் செய்து சாப்பிட்டல் உடல் எடை குறைக்கலாம்.

 மோமோஸ், டம்ப்ளிங்ஸ் அல்லது டிம் சம்ஸ் போன்ற ஸ்டஃப்டு ரெசிபிகள் பண்டைக்காலம் முதலே இருந்து வருகிறது.  காய்கறிகள், இனிப்புகள் போன்றவற்றை மைதா, அரிசி மாவு போன்றவற்றுள் வைத்து ஸ்டஃப் செய்யப்படும் இந்த ரெசிபிகளுக்கு மவுசு அதிகம்.  ஆனால் இந்த உணவுகள் பெரும்பாலும் மைதாவில் தயாரிக்கப்படுவதால் உடல் ஆரோக்கியத்திற்கு கெடுதலாக அமைகிறது.  மைதா சேர்க்காமல் கீடோ டயட் உணவு பொருட்களை கொண்டு ஆரோக்கியமான சிக்கன் டம்ப்லிங் எப்படி தயாரிப்பது என்பது குறித்து பார்ப்போம்.  

momos 625

டிப்பிங் சாஸ் தயாரிக்க:  
பீனட் பட்டர் - 1 மேஜைக்கரண்டி 
ஸ்ரிராச்சா சாஸ் - ஒரு தேக்கரண்டி 
இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி 
சோயா சாஸ் -  1 தேக்கரண்டி 
வினிகர் - 1 தேக்கரண்டி 
கொத்தமல்லி -  தேவையான அளவு 
ஆலிவ் எண்ணெய் - தேவையான அளவு 
உப்பு -  தேவையான அளவு 
எலுமிச்சை சாறு - தேவையான அளவு 

செய்முறை: 
ஒரு சின்ன பௌலில் பீனட் பட்டர், ஸ்ரிராச்சா சாஸ், இஞ்சி பூண்டு விழுது, சோயா சாஸ், வினிகர், கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.  பின் அதில் ஆலிவ் எண்ணெய் சேர்த்து கலந்து உப்பு  மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொள்ளவும்.  இப்போது டிப்பிங் சாஸ் தயார்.  

சிக்கன் டம்ப்ளிங் தயாரிக்க: 
சிக்கன் - 500 கிராம் 
உப்பு - தேவையான அளவு 
மிளகு - 1 தேக்கரண்டி 
பான்பான் பவுடர் - 1 தேக்கரண்டி 
வெங்காயம் - 25 கிராம் 
கொத்தமல்லி - தேவையான அளவு 
ஸ்பிரிங் ஆனியன் - 1 தேக்கரண்டி 
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 
நல்லெண்ணெய் - தேவையான அளவு 
முட்டைக்கோஸ் - தேவையான அளவு 

 

 
 

 செய்முறை: 
ஒரு பௌலில் நன்கு மசித்த சிக்கன், உப்பு, மிளகு, பான்பான் பவுடர், வெங்காயம், கொத்தமல்லி, ஸ்பிரிங் ஆனியன், இஞ்சி பூண்டு விழுது, நல்லெண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.  பின் முட்டைக்கோஸை நறுக்காமல் முழுசாக உறித்து கொள்ளவும்.  அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் முட்டைக்கோஸ் தோலை சேர்த்து சிறிது நேரம் வேக வைக்கவும்.  வெந்தபின் கலந்து வைத்துள்ள சிக்கனை முட்டைக்கோஸில் வைத்து மடித்து ஆவியில் 10 நிமிடங்கள் வைத்து வேக வைத்து எடுக்கவும்.  அடுப்பில் ஒரு பேன் வைத்து அதில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி, சூடானதும் அதில் வேகவைத்து எடுத்த டம்ப்ளிங்ஸை சேர்த்து பொன்னிறமாக வந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.  இந்த டம்ப்ளிங்ஸை முன்பு தயாரித்து வைத்த டிப்பிங் சாஸுடன் சேர்த்து சாப்பிட்டால் அதன் ருசி அருமையாக இருக்கும்.  

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement