உடல் எடை குறைக்கும் மூலிகை சாறு!!

ஆரஞ்சு, கேரட், இஞ்சி ஆகியவற்றின் சாறு எடுத்து குடித்து வரலாம்.  இதனால் உடல் எடை குறையும்.  இதில் கலோரிகள் மிகவும் குறைவாக உள்ளது. 

Translated by: Kamala Thavanidhi  |  Updated: August 12, 2019 14:43 IST

Reddit
Weight Loss: This 3-Ingredient Juice Could Help Speed Up Your Weight Loss
Highlights
  • ஆரஞ்சு சாற்றில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது.
  • நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் மலச்சிக்கல் ஏற்படாது.
  • உடலில் உள்ள கொழுப்புகளை கரைப்பதில் இஞ்சிக்கு பெரும்பங்கு உண்டு.

உடல் எடை குறைப்பு பற்றிதான் ஊரெங்கும் பேச்சு.  பத்திரிக்கை, செய்திகள், புத்தகம் என எல்லாவற்றிலும் உடல் எடை குறைப்பு குறித்து பலவற்றை படித்திருப்போம்.  நம் வாழ்வியல் முறையில் ஏற்படும் ஒழுங்கற்ற தன்மை காரணமாக உடல் பருமன் ஏற்படுகிறது. உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சியை வழக்கமாகி கொண்டால் உடல் பருமன் ஏற்படாமல் இருக்கும்.  உடல் எடை குறைக்க சில எளிமையான குறிப்புகளை பார்ப்போம்.   

f4nfaqko

 

 உடல் எடை குறைக்க புரதம், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் ஆகியவற்றை சம அளவு உட்கொள்ள வேண்டும்.  புரதம் சாப்பிடுவதால் பசியை தூண்டக்கூடிய க்ரெலின் என்னும் ஹார்மோன் கட்டுக்குள் இருக்கும்.  நார்ச்சத்து செரிப்பதற்கு நீண்ட நேரம் ஆகும் என்பதால் பசி உணர்வு ஏற்படாமல் இருக்கும்.  கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் உடல் எடை குறையும்.  சீஸ், அவகாடோ, ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்புகள் இருக்கிறது என்பதால் இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்லலாம்.  

fruit juice

 

துரித உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள், சோடா, சர்க்கரை, கோலா, குளிர்பானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவை உடல் எடையை அதிகரிக்க செய்யும்.  மேலும் கொலஸ்ட்ரால், இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தம், உடல் பருமன் ஆகியவற்றை அதிகரிக்க செய்யும்.  நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.   

ஆரஞ்சு, கேரட், இஞ்சி ஆகியவற்றின் சாறு எடுத்து குடித்து வரலாம்.  இதனால் உடல் எடை குறையும்.  இதில் கலோரிகள் மிகவும் குறைவாக உள்ளது.  இவற்றில் கொழுப்பு சத்து துளியும் இல்லாததால் உடல் எடை குறைக்கவும், செரிமானத்தையும் சீராக்க உதவுகிறது.  இந்த ரெசிபியை தயாரிக்க தேவையான பொருட்களை பார்ப்போம்.  

தேவையானவை: 

கேரட் - 2 

இஞ்சி சாறு - 2 தேக்கரண்டி 

ஆரஞ்சு சாறு - 500 மில்லி லிட்டர்

செய்முறை: 

* ஒரு மிக்ஸியில் கேரட் மற்றும் இஞ்சி சேர்த்து அரைத்து கொள்ளவும்.  

* அத்துடன் ஆரஞ்சு சாறு சேர்த்து அரைத்து குடிக்கவும்.  

* தினமும் காலை வெறும் வயிற்றில் இதனை குடித்து வரலாம். Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement