உடல் எடை குறைய “காபி லெமன் ஜூஸ்”

தினமும் காலையில் ஒரு கப் காபி குடிப்பதனால், நாள் முழுக்க சுறுசுறுப்பாக இருக்கலாம்

  |  Updated: September 25, 2018 18:08 IST

Reddit
Weight Loss: This Coffee-Lemon Juice Mix May Help You Burn Belly Fat And Lose Weight

காபியை பற்றி பலவிதமாக தங்கள் கற்பனைக்கு எட்டியவாறு கவிதைகளையும், ஹைக்கூக்களையும் எழுதி தள்ளுவதை நாம் தினம்தோறும் முகநூலில் பார்த்து கொண்டிருப்போம். காபியின் நறுமணம் மற்றும் சுவைக்காகவே அடிமையாகி கிடக்கும் இந்த காபி பிரியர்களுக்கு அதன் ஆரோக்கிய நன்மைகளும் தெரிந்திருப்பது அவசியம். தினமும் காலையில் ஒரு கப் காபி குடிப்பதனால், நாள் முழுக்க சுறுசுறுப்பாக இருக்கலாம். குறிப்பாக ப்ளாக் காபி. பால் மற்றும் சர்க்கரை சேர்க்கப்படாத இந்த ப்ளாக் காபி உடல் எடை குறைய உதவுகிறது. இத்துடன் எலுமிச்சை சாறு சேர்த்து கொள்வதால் உடலில் ஏற்படும் மாற்றங்களை பார்ப்போம்.

உடல் எடை குறைய

  1. காபி உங்கள் உடலிலுள்ள செல்களை தூண்டி, உடற்பயிற்சி செய்வதற்கான ஊக்கத்தை அளிக்கிறது.
  2. கஃபைன், தியோப்ரோமின், தியோஃப்லின் மற்றும் க்ளோரோஜெனிக் அமிலங்களை சீராக்கி, உடல் எடையை குறைக்க உதவுகிறது.
  3. நாம் உண்ணும் உணவில் இருக்கக்கூடிய கொழுப்புக்களை கரைக்கும் தன்மை காபிக்கு உண்டு.
  4. காபியை அளவாக குடிப்பதனால், செரிமானத்தை தூண்டி, மலச்சிக்கலை தவிர்கிறது. ஆனால், காபியை அளவுக்கு அதிகமாக குடிப்பதனால், உடலுக்கு சில தீங்குகள் உண்டாகும்.
  5. காபியில் இருக்க கூடிய கஃபைன் உடலின் ஆற்றல் மற்றும் வெப்பத்தை சீராக வைத்திருக்க உதவும் தெர்மோ ஜெனிசிஸ் செயல்முறையை தூண்ட கூடியதாய் இருக்கிறது. உடலில் வெப்பம் சீராக இருக்கும்போது தான் நாம் உண்ணும் உணவு ஜீரணமாவதோடு, உடலிலுள்ள கலோரிகளும் எரிக்கப்படுகிறது.
coffee weight loss

காபி உங்கள் உடலிலுள்ள செல்களை தூண்டி, உடற்பயிற்சி செய்வதற்கான ஊக்கத்தை அளிக்கிறது

Listen to the latest songs, only on JioSaavn.com

உடல் எடை குறைப்புக்கு எலுமிச்சை சாறு

  1. எலுமிச்சை சாறு உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது. வளர்சிதை மாற்றம் சீராக இருந்தால்தான் உடல் எடை கட்டுக்குள் இருக்கும். அதனால், தினமும் உங்கள் காலையை எலுமிச்சை சாறு குடித்து துவங்குங்கள்.
  2. எலுமிச்சை சாற்றில் அமிலத்தன்மை இருப்பதால், உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது. மேலும், கல்லீரலில் இருக்க கூடிய சுரப்பை தூண்டுவதால் செரிமானம் சீராகிறது.
  3. தினமும் எலுமிச்சை சாறு குடிப்பதனால், உடல் ஈரப்பதத்துடன் இருக்கும். குறைந்த கலோரி உணவுகளை உட்கொண்டாலும் நீர் இழப்பு ஏற்படாது.
  4. பெரும்பாலான பழச்சாறுகளில் நிறைய கலோரிகள் இருக்கும். ஆனால், இந்த எலுமிச்சை சாற்றில் மிக குறைவாக, ஆறு கலோரிகளே உள்ளன. இதனால் உடல் எடை அதிகரிக்காது.
lemon juice

எலுமிச்சை சாறு உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது

காபி மற்றும் எலுமிச்சை சாறு

சிறிதளவு காபி எடுத்து கொண்டு, அதில் வெந்நீரை ஊற்ற வேண்டும். பின் அத்துடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை சேர்த்து வெதுவெதுப்பாக பருக வேண்டும். தினமும் காலை உடற்பயிற்சி செய்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன் இதனை குடித்து வந்தால், உடற்பயிற்சி செய்யும் உத்வேகம் அதிகரிக்கும். தினமும் காலை ப்ளாக் காபியுடன் எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வர வயிற்று பகுதியில் உள்ள கொழுப்பு மற்றும் ஒட்டுமொத்த உடல் எடையையும் குறைக்க உதவுகிறது. இதன் பயன் அலாதியானது என்றாலும், அளவாக பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், தலைவலி, சோர்வு, குமட்டல், செரிமான பிரச்சனை போன்ற பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பதால், கவனமாக பயன்படுத்த வேண்டும்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement