உடல் எடை குறைக்க “எக் புர்ஜி”

உடல் எடை குறைக்க சரியான உணவு பழக்கத்தை பின்பற்றினாலே போதும். காலை உணவு என்பது உடலுக்கு மிகவும் அத்தியாவசியமானது

एनडीटीवी फूड डेस्क  |  Updated: January 05, 2019 18:08 IST

Reddit
Weight Loss: This Protein-Rich Desi Breakfast Dish Is Perfect For Weight Loss
Highlights
  • Breakfast must never be skipped if you want to lose weight
  • A good breakfast for weight loss must be rich in proteins and fats
  • Egg bhurji is nutritious, delicious and can be rustled up in minutes

உடல் எடை குறைக்க சரியான உணவு பழக்கத்தை பின்பற்றினாலே போதும். காலை உணவு என்பது உடலுக்கு மிகவும் அத்தியாவசியமானது. காலை உணவை தவறவிடும்போது உடலின் வளர்சிதை மாற்றம் தாமதமாகும். இதனால் உடலில் கலோரிகள் சேர்ந்து உடல் பருமனாகிவிடும். உடல் எடை குறைக்க நினைத்தால் முதலில் நீங்கள் காலை உணவை தவறாமல் எடுத்து கொள்ள வேண்டும்.

புரதம், இயற்கை சர்க்கரை மற்றும் ஆரோக்கிய கொழுப்புகள் ஆகிய மூன்றும் நிறைந்த உணவை சாப்பிடலாம். ஏனென்றால் புரதம் மற்றும் கொழுப்பு இரண்டுமே உடலுக்கு ஆற்றலை கொடுக்க கூடியது. உங்களை நாள் முழுக்க உற்சாகமாக வைத்திருக்கும். செரல்ஸ், சர்க்கரை நிறைந்த பழச்சாறுகள் ஆகியவற்றை தவிர்க்கலாம். உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த எக் புர்ஜியை காலை உணவாக சாப்பிடலாம்.

Comments
js2vgrc8
 
மசாலா புர்ஜி
முட்டையில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. வேகவைத்த முழு முட்டையில் 13 கிராம் புரதம், 11 கிராம் கொழுப்பு உள்ளது. பொரித்த முட்டையில் 10 கிராம் புரதம், 11 கிராம் கொழுப்பு உள்ளது. முட்டையுடன் சில மசாலா பொருட்கள் சேர்த்து செய்யப்படும் முட்டை பொரியலை ப்ரட் மற்றும் சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடலாம். இந்த முட்டை பொரியலில் கலோரிகளை குறைக்க நினைத்தால் அதில் தேங்காய் எண்ணெய் சேர்க்கலாம். மேலும் காய்கறிகள் சேர்த்து சாப்பிடலாம். பொடியாக நறுக்கிய தக்காளி, இஞ்சி, பூண்டு, கரம் மசாலா, கொத்தமல்லி இலை ஆகியவை சேர்த்து இந்த முட்டை பொரியலை செய்து சாப்பிடலாம். ருசியாக இருக்கும்.


உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement