உடல் எடையை வெகுவாக குறைக்க உதவும் தக்காளி-பீட்ரூட் ஜூஸ்! - ரெசிபி உள்ளே!!

தக்காளி மற்றும் பீட்ரூட் இரண்டிலும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன, அவை உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும் ஆற்றலை அதிகரிக்கவும் உதவுகின்றன.

  |  Updated: July 25, 2020 16:22 IST

Reddit
Weight Loss: This Tomato-Beetroot Juice May Help You Shed Extra Kilos (Recipe Inside)

தக்காளி-பீட்ரூட் ஜூஸ் கடுமையான வெப்பத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்கவும், மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்திருப்பதற்கு உதவுகின்றன

Highlights
  • தக்காளி-பீட்ரூட் ஜூஸில் விட்டமின் சி சத்து உள்ளது
  • இரண்டிலும் ஆண்டி ஆக்ஸிடெண்ட் காணப்படுகிறது
  • தக்காளியில் குறைந்த கலோரியும், அதிக நார்ச்சத்தும் உள்ளன

தக்காளி இல்லாத சமையலைக் கற்பனை கூட செய்ய முடியாது. இந்திய உணவுகளில் தக்காளியின் பங்கு மிகமிக முக்கியமானது. குறிப்பாக கிரேவி மற்றும் புதுவகையான உணவுகளில் புளிப்புச் சுவைக்காகவும், பரிமாறும் போது அலங்கரிக்கவும் தக்காளி பயன்படுகிறது. அதிலும், நாட்டுத் தக்காளியின் சுவையே தனி. ஆரோக்கியத்திற்கும் உகந்தது. 

தக்காளி சமையலுக்கு மட்டுமில்லாமல், ஜூஸ், ரைட்டாஸ், சாலட், சட்னி போன்ற பல்வேறு உணவுகளிலும் பயன்படுத்தலாம். நம் உணவில் சுவையைச் சேர்ப்பது மட்டுமில்லாமல், பல ஊட்டச்சத்துக்களும் தக்காளியில் உள்ளன. பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. அவைகளில் ஒன்றுதான் உடல் எடையைக் குறைப்பதற்கான தக்காளி-பீட்ரூட் ஜூஸ். 

qtufl2f8தக்காளியில் விட்டமின் சி சத்து உள்ளது

தக்காளி கலோரி குறைவாகவும், நார்ச்சத்து நிறைந்ததாகவும் உள்ளது. இது ஒருவரை நீண்ட நேரம் புத்துணர்ச்சியாக வைத்திருக்கும். வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது. உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. இதே போல், பீட்ரூட்டிலும் நார்ச்சத்து நிரம்பியுள்ளது. இது வெயிட் போடுவதைக் கட்டுப்படுத்துகிறது.

தக்காளி மற்றும் பீட்ரூட் இரண்டிலும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. அவை உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றவும் ஆற்றலை அதிகரிக்கவும் உதவுகின்றன. எனவே காலையில் இந்த சாறு குடித்தால், ஒரு நாளுக்கான நல்ல தொடக்கத்துக்கு வழிவகுக்கும். தக்காளி-பீட்ரூட் சாற்றில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது.

ssf38d5gபீட்ரூட்டில் நார்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது. 


தக்காளி-பீட்ரூட் சாறு செய்முறை:

தேவையான பொருட்கள்:
தக்காளி- 2-3
பீட்ரூட்- 1
புதினா இலைகள்- 3-4
இளஞ்சிவப்பு / கருப்பு உப்பு- சுவைக்கு ஏற்ப
மிளகு தூள்- 1 டீஸ்பூன்
தேன்- 1.5 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு- 1-2 டீஸ்பூன்
ஐஸ்- 1/4 கப் (நொறுக்கப்பட்டது)

ஜூஸ் தயாரிக்கும் முறை:

Listen to the latest songs, only on JioSaavn.com

படி 1. தக்காளியை சிறுசிறு துண்டுகளாக வெட்டவும்
படி 2. பீட்ரூட்டை தோலுரித்து சிறிய துண்டுகளாக நறுக்கவும்.
படி 3. மிக்ஸி அல்லது ஒரு ஜூஸரில் தக்காளி மற்றும் பீட்ரூட் சேர்த்து போட்டு மசிக்கவும். தண்ணீர் நிறைய வேண்டாம்.
படி 4. புதினா இலைகளைப் போட்டு மீண்டும் மசிக்க வேண்டும்.
படி 5. ஒரு பெரிய கண்ணாடி டம்ளரில் ஐஸ் க்யூப்ஸை முதலில் போட வேண்டும்
படி 6. தக்காளி-பீட்ரூட் மசித்தை இப்போது டம்ளரில் ஊற்றவும். அத்துடன் தேன், மிளகு தூள், சிறிது உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து கிளறவும்
படி 7. ஒரு புதினா இலை மற்றும் எலுமிச்சை துண்டுடன் அலங்கரித்து குளிர்ச்சியாக பரிமாறலாம்.

இந்த தக்காளி-பீட்ரூட் சாறு கோடை காலத்தில் கடுமையான வெப்பத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்கவும், மென்மையாகவும், மிருதுவாகவும், உள்ளே இருந்து ஒளிரவும் உதவுகின்றன. எனவே இதை வீட்டிலேயே முயற்சி செய்து, அனைவருக்கும் பரிமாறவும். ஆரோக்கியமாக இருங்கள், பாதுகாப்பாக இருங்கள்.

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய சமையல்

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement