உங்கள் தொப்பையை கரைக்கும் காய்கறிச்சாறு

காய்கறிகளில் ஆண்டிஆக்ஸிடண்ட், வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்திருக்கிறது

एनडीटीवी फूड डेस्क  |  Updated: December 21, 2018 12:30 IST

Reddit
Weight Loss: 3 Winter Vegetable Juices To Cut Belly Fat 

காய்கறிகளில் ஆண்டிஆக்ஸிடண்ட், வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்திருக்கிறது. இவற்றை தினசரி உணவில் சேர்த்து கொண்டால் உடலில் கலோரிகள் அதிகபடியாக சேராமல் உடல் எடை கட்டுக்குள் இருக்கும். சில காய்கறிகளில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிப்பதற்கு நீண்ட நேரமாகும். இதனால் உங்களுக்கு அதிகநேரம் பசி உணர்வு இல்லாமல் இருக்கும். காய்கறி சாறுகளை கொண்டு எப்படி உடல் எடை குறைப்பது என்பதை பார்ப்போம்.

கேரட் சாறு
கேரட்டில் ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம். நார்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் இருக்கும் இந்த கேரட் உங்கள் ஜீரண சக்தியை அதிகரித்து உடல் எடையை குறைத்துவிடும். தினசரி கேரட் குடித்துவரலாம் அல்லது அப்படியே சாப்பிடலாம்.

பீட்ரூட் சாறு
பீட்ரூட் சாற்றில் தாதுக்கள், நார்ச்சத்து, ஆண்டிஆக்ஸிடண்ட் ஆகியவை நிறைந்திருக்கிறது. உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு பீட்ரூட் சாறு மிகவும் உகந்தது. இதில் மிக குறைவான கலோரிகளே இருக்கிறது. இத்துடன் ஆப்பிள் அல்லது கேரட் சேர்த்து அரைத்து அந்த சாற்றை குடித்து வரலாம்.
 

s5sogbbo

 

கீரை சாறு
கீரையில் ஏகப்பட்ட நன்மைகள் அடங்கியிருக்கிறது. இதில் கார்போஹைட்ரேட் மிக குறைந்த அளவில் உள்ளது. நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த கலோரி குறைவான கீரை சாற்றை அவ்வப்போது குடிக்கலாம். உடல் எடை குறையும் வாய்ப்பு அதிகம்.
 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement
 
Listen to the latest songs, only on JioSaavn.com