உடல் எடையைக் குறைக்க உதவும் ஆளி விதை பச்சடி ரெசிபி!

உடல் எடையைக் குறைக்க உதவும் ஆளி விதை பச்சடி ரெசிபியை செய்வது குறித்து இங்குப் பார்க்கலாம்.

  |  Updated: August 27, 2020 16:00 IST

Reddit
High Protein Diet: How To Make Flax Seed Raita For Weight Loss

ஆளி விதையும், சுரைக்காயும் உடல் எடையைக் குறைக்க உதவுகின்றன

Highlights
  • உடல் குளிர்ச்சிக்கும், உடல் எடையைக் குறைக்க உதவவும் துணைபுரிகிறது
  • ஆளி விதைகளில் நமக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் உள்ளன
  • ஆளி விதையானது ஸ்மூத்திகள், ஜூஸ்க், நன்னாரி சர்பத் போன்றவைகளில் பயன்படுத்

உணவு ரெசிபிகளில் பலருக்கும் பிடித்த ரெசிபி பச்சடி தான். குறிப்பாக சைவ பிரியர்கள் அதிகம் பச்சடிகளை விரும்புவார்கள். இதில் பலவகைகள் உள்ளன. வெண்டைக்காய் பச்சடி, மாங்காய் பச்சடி  என விதவிதமாக செய்யலாம். ஆனால், அதே நேரத்தில் டயட்டில் இருப்பவர்கள் அதற்கு ஏற்றவாறு உணவுத்திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டும்.

அந்த வகையில், இங்கு உடல் எடையைக் குறைக்க உதவும் ஆளி விதை பச்சடி ரெசிபி குறித்த விவரங்களை இங்கு பார்க்கலாம். இதில் தயிர், குறை கொழுப்பு சத்துகள் இருப்பதால், உடல் குளிர்ச்சிக்கும், உடல் எடையைக் குறைக்க உதவவும் துணைபுரிகிறது.

Listen to the latest songs, only on JioSaavn.com

k4pt60l8


முதலில் ஆளி விதைகளை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். அதே நேரத்தில்,  சுரைக்காயை நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது வேக வைத்த சுரைக்காயுடன் தயிர், ஊறிய ஆளிவிதை ஆகியவற்றை சேர்க்க வேண்டும். மல்லி இழை, கடுகு சேர்த்து தாளித்தால் போதும். ஆளிவிதை பச்சடி ரெடி.

ஆளி விதைகளில் நமக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் உள்ளன, இது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது. மேலும், நார்ச்சத்துகள், புரதச்சத்து, மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட ஊட்டச்சத்துகள் உள்ளன. இவை உடல் எடையைக் குறைக்க உதவுகின்றன. ஆளி விதையானது ஸ்மூத்திகள், ஜூஸ்க், நன்னாரி சர்பத் போன்றவைகளில் பயன்படுத்தலாம். 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

தொடர்புடைய சமையல்

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement