மெட்டபாலிஸத்தைத் தூண்டி உடல் எடையைக் குறைக்கும் இரண்டு பொருட்கள்!

வெந்தயம் மற்றும் ஏலக்காயில் உடல் எடைக்கும் தன்மை அதிகம் உள்ளது.

Edited by: Kamala Thavanidhi  |  Updated: April 01, 2019 13:26 IST

Reddit
Weight Loss: These Two Spices May Help Boost Your Body's Metabolism
Highlights
  • உடல் எடை குறைப்பிற்கு உடற்பயிற்சி செய்வது அவசியம்.
  • ஏலக்காயில் ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் உணவில் சேர்த்து கொள்வது நல்லது.
  • வெந்தயம் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்

இந்திய சமைலறைகளில் இருக்கும் பொருட்கள் கிட்டத்தட்ட புதையல்களைப் போன்றது. அதில் இருக்கும் பல பொருட்கள் சமைக்க மட்டுமல்ல, உடல் நலத்திற்கும் ஏற்றது. எவ்வளவு நற்குணங்கள் இருக்கிறது என்று தெரியாமலேயே சுவைக்காக மட்டுமே பலவற்றை நம் அன்றாட சமையல்களுக்குப் பயன்படுத்துகிறோம். 'Healing Foods'என்ற புத்தக்கத்தில் எழுதப்பட்டுள்ளதுபடி நாம் பயன்படுத்தும், ஹெர்பல்ஸ், வேர்கள், காய்கள், பழங்கள், பெர்ரிகள் மற்றும் கீரைகள் ஏகப்பட்ட பலன்களை நமக்குத் தருகிறது. கிருமிகளை அழிப்பது முதல் செரிமானம் வரை நமக்கு பல நன்மைகளை செய்கிறது.

h5tfaji

ஹெல்தியான செரிமானம் மட்டுமே உடல் எடையைக் குறைக்க உதவும். உடல் எடை குறைப்பைப் பற்றி நாம் நினைக்கும்போது நிச்சயம் இந்த 2 ஸ்பைஸ்களை நினைவில் கொள்ளவேண்டும். அதுதான் ஏலக்காய் மற்றும் வெந்தயம். இந்த இரண்டு பொருட்களும் பலவிதமான சமையல்களுக்கு நாம் பயன்படுத்துகிறோம். ஏலக்காய் மற்றும் வெந்தயத்தால் நாம் உடனடியாக எந்தவித பாதிப்பும் இல்லாமல் கிலோக்களைக் குறைக்கலாம்.'Healing Foods' புத்தகத்தில், ஏலக்காய் செரிமானத்தை சரிசெய்து, மெட்டபாலிசத்தைத் தூண்டி கொழுப்புகளை கரைக்க உதவுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு வெந்தயமும் செரிமான மண்டலத்தை எந்த பாதிப்பும் வராமல் பாதுகாக்க செய்கிறது. அதோடு மட்டுமல்லாமல் இந்த இரண்டு ஸ்பைஸ்களிலும் நார்ச்சத்து நிரம்பியுள்ளதால் பசியுணர்வைக் கட்டுப்படுத்துகிறது. இந்த இரண்டு ஸ்பைஸ்களையும் உங்கள் சமையலுக்குத் தொடர்ந்து பயன்படுத்தினால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.ஏலக்காயில் உள்ள ஆண்டிஆக்சிடண்ட்ஸ் அழற்சியைப் போக்கி சுறுசுறுப்பைத் தரும். வெந்தயம் கொழுப்பைக் கட்டுப்படுத்தும். ஏலக்காயை டீ-யில் மட்டுமே கலந்து குடிக்காமல் இறைச்சியுடன் சேர்த்து சாப்பிடலாம். வெந்தயத் தண்ணீரை டீடாக்ஸ் ட்ரிங்க்ஸாகவும் குடிக்கலாம். சர்க்கரையை கட்டுப்படுத்தும். வெந்தயத்தை ஊற வைத்து அதில் எலுமிச்சை சாறு பிழிந்து குடித்து வந்தால் உடல் எடை குறைவதை நிச்சயம் கண்கூடாகப் பார்க்கலாம். 

Listen to the latest songs, only on JioSaavn.comஉடல் எடை குறைப்புக்கு விடா முயற்சியும், தேவையான டயட்டும் கூடவே உடற்பயிற்சியும் அவசியம். மேலே சொன்ன இந்த இரண்டு ஸ்பைஸ்களையும் உங்கள் டயட்டில் சேர்த்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். 

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement