உடலை டீடாக்ஸ் செய்ய வீட்கிராஸ் ஜூஸ் குடிக்கலாம்!!

இதில் வைட்டமின் சி, ஈ, பி காம்ப்ளக்ஸ், பீட்டா கெரட்டின், கால்சியம், மக்னீஷியம், பொட்டாஷியம், இரும்புச்சத்து மற்றும் அமினோ அமிலம் ஆகியவை இருக்கிறது.

Translated by: Kamala Thavanidhi  |  Updated: July 12, 2019 13:03 IST

Reddit
Here's How Wheatgrass Juice May Help You Detox
Highlights
  • நம் உணவு பழக்கத்தை பொருத்துதான் உடல் ஆரோக்கியம் இருக்கும்.
  • வீட்கிராஸ் சாறு குடிப்பதால் கல்லீரலில் இருக்கும் நச்சுகள் வெளியேறுகிறது.
  • வீட்கிராஸ் மற்றும் ஆரஞ்சு சாறு சேர்த்து குடிக்கலாம்.

வேலைப்பளு மற்றும் பரபரப்பான வாழ்க்கை சூழல் காரணமாக நம் உணவுப்பழக்கம் சீராக இருப்பதில்லை.  உடல் ஆரோக்கியமாக இருக்க கட்டாயமாக உணவு பழக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும்.  அதேபோல நாம் சாப்பிடும் உணவுகளில் இருக்கக்கூடிய நச்சுக்கள் உடலில் தங்கிவிடுகிறது.  இந்த கழிவுகளையும் நச்சுக்களையும் நீக்க சில முயற்சிகளை நிச்சயமாக எடுக்க வேண்டும்.  உடலை டீடாக்ஸ் செய்வதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.  அப்படி உடலை டீடாக்ஸ் செய்ய வீட்கிராஸ் பயன்படுத்தலாம்.  

3pb65838

வீட்கிராஸில் 70 சதவிகிதம் க்ளோரோஃபில் இருக்கிறது.  உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், இரத்தத்தை சுத்திகரிக்கவும், செரிமானத்தை சீராக்கவும் இந்த வீட்கிராஸ் பயன்படுத்தலாம்.  இதில் வைட்டமின் சி, ஈ, பி காம்ப்ளக்ஸ், பீட்டா கெரட்டின், கால்சியம், மக்னீஷியம், பொட்டாஷியம், இரும்புச்சத்து மற்றும் அமினோ அமிலம் ஆகியவை இருக்கிறது.  இந்த வீட்கிராஸை அரைத்து அதன் சாறு எடுத்து குடிக்கலாம்.  வீட்கிராஸை அரைத்து 15-20 நிமிடங்களில் குடித்துவிடுவது நல்லது.  

இதில் க்ளோரோஃபில் இருப்பதால் உடலை டீடாக்ஸ் செய்கிறது.  பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க வீட்கிராஸ் சாறு குடிக்கலாம்.  கல்லீரலை டீடாக்ஸ் செய்யவும் பயன்படுகிறது. 

Comments(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement