பழங்களை எப்போது சாப்பிட வேண்டும்!!

தூங்க போகும்முன் பழங்கள் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்.  சர்க்கரை நிறைந்த பழங்கள் உங்களை புத்துணர்வுடன் வைத்திருக்கும் என்பதால் தூங்க செல்வதற்கு 2 அல்லது 3 மணி நேரத்திற்கு முன்பே சாப்பிடுவது நல்லது. 

Written by: Kamala Thavanidhi  |  Updated: June 06, 2019 12:24 IST

Reddit
when and how to eat the fruits

உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க பழங்கள் மற்றும் காய்கறிகள் எவ்வளவு முக்கியம் என்பது குறித்து, ஊட்டச்சத்து நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.  அவற்றில் வைட்டமின், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் போன்றவை இருப்பதால் தினமும் உங்கள் தட்டில் பாதியளவு பழங்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.  நீங்கள் நினைத்த நேரத்திற்கெல்லாம் பழங்களை சாப்பிடக்கூடாது. குறிப்பாக உணவு சாப்பிட்ட பின் பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்கவும்.  சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த பழங்கள் உணவை நொதிக்க செய்யும்.  பழங்களை எப்போதும் தனியாகத்தான் சாப்பிட வேண்டும். உணவுடன் சேர்த்து சாப்பிடும்போது செரிமானம் சீராக இருக்காது.  அல்லது சாப்பிட்டு அரை மணி நேரத்திற்கு பிறகு பழங்களை சாப்பிடலாம்.

எப்போது சாப்பிடலாம்?

காலையில் ஒரு க்ளாஸ் தண்ணீர் குடித்த பின் பழங்களை சாப்பிடலாம்.  காலை வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடுவதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.  அத்துடன் உடல் எடை குறைத்து, உடலுக்கு ஆரோக்கியத்தையும் கொடுக்கும்.  பழங்களை காலை வெறும் வயிற்றில், காலை உணவிற்கும் மதிய உணவிற்கும் இடைப்பட்ட நேரத்தில் மற்றும் மாலை வேளையில் சாப்பிடலாம்.  மதிய உணவிற்கு முன் பழங்கள் சாப்பிடுவதால் உணவின் அளவு குறைக்கப்படுகிறது.  ஆப்பிள், பேரிக்காய், வாழைப்பழம் மற்றும் ராஸ்பெர்ரி போன்ற பழங்களில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் இதனை அடிக்கடி சாப்பிடலாம்.

அதேபோல தூங்க போகும்முன் பழங்கள் சாப்பிடுவதை தவிர்த்திடுங்கள்.  சர்க்கரை நிறைந்த பழங்கள் உங்களை புத்துணர்வுடன் வைத்திருக்கும் என்பதால் தூங்க செல்வதற்கு 2 அல்லது 3 மணி நேரத்திற்கு முன்பே சாப்பிடுவது நல்லது.  பழங்கள் ஆரோக்கியமானது தான் என்றாலும், அவற்றை சரியான நேரத்தில் உட்கொள்வதால் அதிகபடியான பயன்களை பெறலாம்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement