மழைக்காலத்தில் கீரை வகைகளை தவிர்க்க வேண்டுமா?

Sushmita Sengupta  |  Updated: August 03, 2018 18:10 IST

Reddit
Why Should You Avoid Leafy Greens During Monsoons?
Highlights
  • மழைக்காலத்திற்கு ஏற்ப, ஆரோக்கியமான உணவு வகைகளை சாப்பிட வேண்டும்
  • நார்ச்சத்து இருக்க கூடிய காய்கறிகளை மழைக்காலத்தில் எடுத்து கொள்ள வேண்டும்
  • மழைக்காலத்தில், பாக்டீரியா தொற்று நோய்களை கீரை வகைகள் தாக்குகின்றன

வெயில் காலம் முடிந்து மழைக்காலம் தொடங்கியுள்ளது. பருவ நிலை மாறும் போது, மனிதனின் உடலிலும் மாற்றங்கள் ஏற்படும். பொதுவாக, மழைக்காலத்தில் மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, மழைக்காலத்திற்கு ஏற்ற ஆரோக்கியமான உணவு வகைகளை சாப்பிட வேண்டும். மேலும், சில உணவுகளை மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டிய அவசியமும் உண்டு.

spinach 620x350

வெயில் காலத்தில் ஆரோக்கியமாக இருக்க கூடிய உணவு வகைகளும் மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டியவையாக உள்ளது. பெரும்பாலும், வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகளை மழைக்காலத்தில் சாப்பிட வேண்டும். நார்ச்சத்து அதிகமாக இருக்கு கூடிய காய்கறி வகைகளை மழைக்காலத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.

“மழைக்காலத்தில் பாக்டீரியா தொற்று நோய்கள் கீரை வகைகளை தாக்குகின்றன. அதனால் கீரை உணவுகளை தவிர்க்க வேண்டும்” என்று ஊட்டச்சத்து நிபுணர் ரூபாலி தத்தா தெரிவித்துள்ளார். மழைக்காலத்தில் கீரை சமைக்கும் போது, நன்றாக கழுவி பயன்படுத்த வேண்டும். சுத்தமாக வேகவைத்த காய்கறிகளை சாப்பிட வேண்டும்.

cabbage 625

மழைக்காலத்தில் கீரை வகைகள் பயன்படுத்துவதை குறைத்து கொள்ள வேண்டும். சுத்தம் செய்யப்பட்ட கீரை வகைகளை பார்த்து வாங்க வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement