மழைக்காலங்களில் ரோட்டுக்கடை உணவைத் தவிர்க்க வேண்டியதன் அவசியம் என்ன ?

மழைக்காலம் ஆரம்பித்துவிட்டது. இனிமேல் எப்போது மழை பெய்யும் என்று நாம் எதிர்ப்பார்த்திருக்க முடியாது

Sushmita Sengupta  |  Updated: July 18, 2018 19:00 IST

Reddit
Why Should You Avoid Street Food In Monsoon: 5 Handy Tips To Eat Out This Season

மழைக்காலம் ஆரம்பித்துவிட்டது. இனிமேல் எப்போது மழை பெய்யும் என்று நாம் எதிர்ப்பார்த்திருக்க முடியாது. எப்போது வேண்டுமானாலும் பெய்யலாம்.

திடீரென்று நீங்கள் எதிர்பார்க்காத சமயத்தில், மழை பெய்யும் போது ரோட்டோர டீக்கடைகளில் சூடான டீயும், பஜ்ஜியும் சாப்பிடுவதை கற்பனை செய்து பாருங்கள். இதுமேல் அடிக்கடி நிகழலாம். ஆனால், இதை எப்போதாவது ஒருமுறை சாப்பிடுவதில் தவறு இல்லை.

மழைக்காலங்களில் தொடர்ந்து ரோட்டோரக்கடைகளில் சாப்பிடுவது தொற்று நோயை ஏற்படுத்தி, நோய் எதிர்ப்புசக்தியை குறைத்து ஆரோக்கியத்தை பாதிக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மழைக்காலங்களில் மோசமான வானிலையால், பாக்டீரியா தொற்றால் அஜீரணக்கோளாறு, டைபாய்டு, டெங்கு போன்ற நோய்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு.  இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், மழைக்காலங்களில் ரோட்டோரக்கடைகளில் சாப்பிடும் போது அவை பாக்டீரியா மற்றும் மைக்ரோப்களின் தாக்குதலுக்கு ஆளாக வாய்ப்புண்டு.

street food

மழைக்காலங்களில் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் :

எப்போதும் முழுவதுமாக சமைத்த உணவுகளையே உட்கொள்ள வேண்டும். பாதியாகவோ அல்லது சமைக்காத உணவுகளை உண்ணக்கூடாது. உணவுகளை வெப்பத்தில் சமைக்கும்போது, அதில் இருக்கும் கிருமிகள் அழிந்துவிடும்.

Listen to the latest songs, only on JioSaavn.com

barbecue corn 625

எப்போதும் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

காரமான, எண்ணெய் அதிகம் கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்ளக்கூடாது. மழைக்காலங்களில் உணவு செரித்தல் மெதுவாக நடைபெறும். அதனால், தரமான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

CommentsAbout Sushmita SenguptaSharing a strong penchant for food, Sushmita loves all things good, cheesy and greasy. Her other favourite pastime activities other than discussing food includes, reading, watching movies and binge-watching TV shows.

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
Tags:  MonsoonDiet

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement