கனோலா ஆயில் என்னும் ரேப்ஸீடு ஆயிலை ஏன் பயன்படுத்த வேண்டும்?

பிராஸிகா நேப்பஸ் என்னும் தாவரக் கொட்டையிலிருந்து இந்த ரேப்ஸீடு ஆயில்  கனடா நாட்டில் தயாரிக்கப்படுகிறது. பல ரெஸ்டாரண்ட்கள் இந்த கனோலா ஆயிலை தங்கள் கிச்சனில் பயன்படுத்துகிறார்கள்.

Edited by: Kamala Thavanidhi  |  Updated: March 31, 2019 11:48 IST

Reddit
Why Should You Start Cooking With Rapeseed Or Canola Oil?

சமைப்பதற்கு சமையல் எண்ணெய் மிக முக்கியமான ஒன்று. பல்வேறு சமையல் எண்ணெய்களை நாம் பயன்படுத்தி வருகிறோம். சமீபத்திய வரவுதான் இந்த கனோலா என்னும் ரேப்ஸீடு ஆயில். இது பல்வேறு ஹெல்தி பலன்கள் உள்ளடக்கியது. பார்ப்பதற்கு கடுகு போன்று இருக்கும் இது,  பிராஸிகா நேப்பஸ் என்னும் தாவரக் கொட்டையிலிருந்து இந்த ரேப்ஸீடு ஆயில்  கனடா நாட்டில் தயாரிக்கப்படுகிறது. பல ரெஸ்டாரண்ட்கள் இந்த கனோலா ஆயிலை தங்கள் கிச்சனில் பயன்படுத்துகிறார்கள். உணவியல் நிபுணர்களும் தங்கள் பங்குக்கு இதன் நன்மைகளை சொல்லி, இந்த ஆயிலைப் பயன்படுத்த அறிவுறுத்துகிறார்கள்.

ஏன் இந்த ஆயில் நல்லது?

1) கனோலா ஆயிலில் அதிக அளவு ஃபேட்டி ஆசிட்கள் நிரம்பியுள்ளது. இதனால் கெட்ட கொழுப்புகள் குறைந்து உடல் எடை அதிகரிக்காமல் பாதுகாக்கிறது.

nnaha87

 

2) மூளை செயல்திறனுக்கு ஏற்ற ஒமேகா 3 வைட்டமின் நிறைந்தது. நரம்பு மண்டலத்தை ரிலாக்ஸ் செய்து மனஅழுத்ததில் இருந்து விடுவிக்கிறது.3) மிகக்குறைந்த அளவே கொழுப்பு உள்ளதால், கொலஸ்ட்ரால் பாதிப்பிலிருந்தும் இதயநோய்கள் வராமலும் தடுக்கிறது.4) வைட்டமின் E மற்றும் ஆன்டிஆக்ஸிடட்ன்ட்கள் இருப்பதால், உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் கிருமிகளை அழிக்கிறது. 

 நன்மைகள் பல கொண்ட இந்த ரேப்ஸீடு ஆயிலை வறுக்க, தாளிக்க, பேக்கிங் மற்றும் ஸ்மூத்தீஸ் சாலட்களில் பயன்படுத்தலாம். இவ்வலவு நன்மைகள் தரும் இந்த ஆயிலை பயன்படுத்தத் தயாராகிவிடீர்களா> உங்களுக்காக சில ரெசிப்பிகள்...

கிரில்டு கார்ன் மற்றும் டொமேட்டோ சாலட்

தேவையானவை: 

2 கப் கிரில்டு அல்லது ரோஸ்டட் கார்ன்

1 கப் வெங்காயம்

2 கப் நறுக்கிய செர்ரி தக்காளி

அரை டீஸ்பூன் சீரகப்பொடி 

3 அவித்த முட்டை முட்டை. நான்காக வெட்டியது

1 லெட்யூஸ் லீஃப் நறிக்கியது

1 டீஸ்பூன் கனோலா ஆயில்

1 பல் பூண்டு நறுக்கியது

சிறிது லெமன் ஜூஸ்செய்முறை:

கார்ன், முட்டை, லெட்யூஸ், வெங்காயம், தக்காலை மற்றூம் ஆலிவை ஒன்றாகக் கலந்து கொள்ளவும். தனி பவுலில் சீரகப்பொடி, பூண்டு, கொத்தமல்லி, கனோலா ஆயில், லெமன் ஜூஸ்  ஒன்றாக சேர்த்து பரிமாறவும்.ஃபிர்னி

தேவையானவை:

1 லிட்டர் பால்

½ கப் சர்க்கரை

¼ உடைத்த் அரிசி

2 டீஸ்பூன் பிஸ்தா

1 டீஸ்பூன் குங்குமப்பூ

2 டீஸ்பூன் கனோலா ஆயில்

1 ஏலக்காய் விதைசெய்முறை:

ஸ்டெப் 1: ஒரு பேனில் அரிசி மற்றும் கனோலோ ஆயில் சேர்த்து 3-4 நிமிடங்கள் வரை வறுக்கவும். பிறகு பால் மற்றும் ஏலக்காய் சேர்த்து லேசான சூட்டில் வேகவைக்கவும்

ஸ்டெப் 2: அதனுடன் பிஸ்தா, குங்குமப்பூ, சர்க்கரை சேர்த்து கிளறவும்.

ஸ்டெப்: சிறுது நேரம் கொதிகக் வைத்து ஆறவைத்து, பிறகு ஃபிரிட்ஜில் அரைமணி நேரம் வைத்து பறிமாறவும்.பாலக் பகோடா:

தேவையானவை:

200கிராம் பாலக் அல்லது பசலைக்கீரை

1 பச்சை மிளகாய்

250 கிராம் கோதுமை மாவு

4 கப் கனோலா ஆயில்

தேவையான அளவு உப்புசெய்முறை:

தண்ணீரைக் கொதிக்க வைத்து அதில் கீரையைப்போட வேண்டும். ஒரு நிமிடம் கழித்து கீரையை எடுத்து ஆறவைக்கவும். பிறகு அரைத்து எடுத்துக் கொள்ளவும். கனோலா ஆயிலை ஒரு பெரிய கடாயில் ஊற்றி அடுப்பில் எண்ணெயைக் காயவைக்க  வேண்டும், பிறகு ஒரு பெரிய பாத்திரத்தில் அரைத்தக் கீரை, மாவு மற்றும் மற்ற பொருட்களைச் சேர்த்து சிறிய பால் சைஸில் உருட்டிக் கொள்ளவும். எண்ணெய் காய்ந்தவுடன் உருட்டி வைத்த மாவைப் போட்டு பொன்னிறமாக வருத்து சூடாகப் பறிமாறவும்.மேல சொன்ன அனைத்து ரெசிப்பிகளும் கனோலா ஆயிலில் சமைத்ததால் லேசானது, செரிமானத்துக்கு நல்லது.

Commentsஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement