பாதாமை ஊறவைத்து சாப்பிடுவது தான் நல்லது..! - ஏன்..?

ஊறிய பாதாமில் இருக்கும் வைட்டமின்-B17 உடலில் புற்று நோய்க்கு எதிராக செயல்படும். பாதாமில் உள்ள Flavonoid உடலில் கட்டிகள் வளராமல் தடுக்கும்.

Gargi Sharma, Weight Management Expert  |  Updated: October 15, 2019 16:59 IST

Reddit
Why Soaked Almonds are Better Than Raw Almonds

உளர்ந்த பாதாமுக்கும் ஊறவைத்ததற்கும் சுவையில் மட்டுமல்ல, அதில் ஆரோக்கிய வேறுபாடும் உள்ளது

Highlights
  • பாதாம் - வைட்டமின் E மற்றும் ஒமேகா 3 போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது.
  • பாதாம் கிட்டத்தட்ட 19,000 ஆண்டுகளாக உள்ளது என்று நம்பப்படுகிறது.
  • பாதாம் பசியைக் கட்டுப்படுத்தி, நீண்ட நேரம் முழுமையாக உணரவைக்கும்.

பார்க்க அழகாக பிரவுன் நிரத்தில், சாப்பிட முறுமுறுப்பான பாதாம் பருப்புகள் வைட்டமின்கள் மற்றும் புரதம் நிறைந்த ஊட்டமிகு உணவுப் பொருள் மட்டுமல்ல, அவை சமைப்பதற்கும் மகிழ்ச்சியைத் தரக்கூடியதாகும். எல்லொரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றாகும்.

பாதாம்கள் கிட்டத்தட்ட 19,000 வருடங்களாக பயன்படுத்தப்படுவதாக நம்பப்படுகிறது. முதலில் அவை ஈரான், அஃப்கானிஸ்தான் மற்றும் துருக்கியில் விளைவிக்கப்பட்டன. பிறகு மத்திய தரைக்கடல் பகுதி,  ஐரோப்பா மற்றும் சீனா ஆகிய பகுதிகளுக்குப் பரவியது. பாதாம்களுக்கு வரலாற்று முக்கியத்துவம் உண்டு. பாதாம் மற்றும் பாதாம் மரங்கள் இரண்டும் பைபிளின் பழைய ஏற்பாட்டில் (Old Testament) குறிப்பிடப்பட்டுள்ளது. மோசஸின் கதையான எக்ஸோடஸிலும் பாதாம் மரத்தின் கிளைகளைப் பற்றி பேசப்பட்டுள்ளது. அதற்கும் மேலாக, எகிப்தியர்கள் தங்களது எல்லா விதமான புதயல்களிலும் பாதாம் பருப்புகளை உள்ளடக்கி வைத்துள்ளனர்.

பாதாமில் நிறைந்திருக்கும் ஊட்டச்சத்துக்கள் :

பாதாம்களில் வைட்டமின்-E, நார்சத்துக்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரதங்கள் நிறைந்திருக்கின்றன. நம்பமுடியாத அளவுக்கு ஊட்டச்சத்துக்கள் உள்ளடங்கியதால் அவை (Super food) சூப்பர்ஃபுட் என்று கருதப்படுகிறது. புரதம் அதிகமாக இருப்பதால், அவை உங்களை நிறைவாக அதிக நேரம் வைத்திருக்கும். மேலும், அதில் நிறைந்திருக்கும் மாங்கனீசுகள் எலும்புகளை வலுப்படுத்தவும், இரத்த சர்க்கரையை சீராக்கவும் உதவுகிறது. இரத்த அழுத்த பிரச்னைகள் உள்ளவர்களுக்கு அவை மிகவும் உதவியாக இருக்கும், மேலும், தசை மற்றும் நரம்பு செயல்பாட்டிற்கும் துணைநிற்கும்.

ஊறவைத்த பாதாமுக்கும் உளர்ந்த பாதாமுக்கும் உள்ள வித்தியாசம் என்ன..?

உளர்ந்த பாதாமுக்கும் ஊறவைத்ததற்கும் உள்ள வேறுபாடு  என்பது சுவையில் மட்டுமல்ல, அதில்ஆரோக்கிய வேறுபாடும் உள்ளது. பாதாமின் மேல் இருக்கும் தோல் பகுதியில் டானின் எனும் வேதிப்பொருள் இருப்பதால், நம் உடலில் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் தன்மையை அது குறைக்கிறது. பாதாமை ஊறவைப்பதனால், அதில் உள்ல தோல் பகுதியை எளிதில் நீக்கிவிட்டுச் சாப்பிடலாம். இதனால், பருப்பில் நிறைந்திருக்கும் ஊட்டச்சத்துக்கள் முழுமையாக உடலைச் சாரும்.

பாதாமை ஒரு வாரத்திற்குத் தேவையான அளவு எடுத்துக்கொண்டு, அவற்றை ஒரு கப் நீரில், மூடிய நிளையில் சுமார் 8 மணிநேரம் ஊறவைத்து எடுக்கொள்ளவும். பிறகு நீரை வடிகட்டி, பருப்பிலிருந்து தோலை உரித்தெடுத்து ஒரு பிளஸ்டிக் கண்டெய்னரில் ஒரு வார்த்திற்கு வைத்து சப்பிடலாம்.

ஊறவைத்த பாதாமை உன்பதால் கிடைக்கும் பலன்கள் என்ன..?

1.  செரிமானத்திற்கு உதவும் : பாதாமை ஊறவைப்பதால், நொதிகள் வெளிப்படும். இது செரிமானத்திற்கு உதவுகிறது. கொழுப்பு செரிமானம் செய்யும் நன்மை பயக்கும் என்சைம் லிபேஸை வெளிப்படுத்தும்.

2. உடல் எடை குறையும் : ஊறவைத்த பாதாம் சப்பிட்டால், வயிறு நிறைவாக இருக்கும் உணர்வைத் தரும். இதனால், உணவுகளுக்கு இடையில் பசிக்கிறது என சிற்றுண்டிகளை எடுத்துக்கொள்ளும் அவசியம் இருக்காது.

3. கெட்ட கொழுப்புக்களை குறைத்தும், நல்ல கொழுப்புக்களை அதிகப்படுத்தியும் நம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

4. பாதாம்கள் antioxidant நிறைந்த உணவாகும். ஊறவைத்த பாதமில் இருக்கும் வைட்டமின்-E ஆன்டி ஆக்ஸிடண்டுகளாக செயல்பட்டு உடல் வீக்கத்தையும் முதுமையையும் கட்டுப்படுத்தும்.

5. ஊறிய பாதாமில் இருக்கும் வைட்டமின்-B17 உடலில் புற்று நோய்க்கு எதிராக செயல்படும்.

6. பாதாமில் உள்ள Flavonoid உடலில் கட்டிகள் வளராமல் தடுக்கும்.

7. குளுக்கோஸ் அளவை குறைத்து, கட்டுப்பாட்டில் வைத்திருக்கம். மேலும், உயர் இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கும்.

Listen to the latest songs, only on JioSaavn.com

8. ஊறவைத்த பாதாமில் உள்ள ஃபோலிக் அமிலம் பிறவிக் குறைபாடுகளைக் குறைக்கும்.

இந்த சூப்பர்ஃபுட்டில் நிறைந்திருக்கும் ஊட்டச்சத்து குணங்கள் அன்றாட வாழ்வில் நம் உடல் தேவைகளை பூர்த்தி செய்ய உறுதுணையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

சம்பந்தமுள்ள கட்டுரைகள்:
Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement