தினமும் கேரட் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன??

கேரட், பீட்ரூட், இஞ்சி, புதினா, மிளகு ஆகியவை சேர்த்து ஜூஸ் தயாரித்து குடிக்கலாம். 

Edited by: Kamala Thavanidhi  |  Updated: September 16, 2019 17:06 IST

Reddit
Here's Why You Should Drink Beetroot And Carrot Juice Every Day!
Highlights
  • பீட்ரூட்டில் நார்ச்சத்து நிறைந்துள்ளது.
  • இது உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்யும்.
  • மலச்சிக்கலை தவிர்க்க உதவுகிறது.

பீட்ரூட்டில் ஏராளமான நன்மைகள் இருக்கிறது.  கேரட் மற்றும் பீட்ரூட் சாறு இரண்டையும் சேர்த்து குடித்து வந்தால் உடலில் இரத்தம் ஓட்டம் அதிகரிக்கும்.  இரத்த அழுத்தம் குறையும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் மற்றும் உடல் உபாதைகளை தவிர்க்கும்.  கேரட் மற்றும் பீட்ரூட்டில் ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருக்கிறது.  தக்காளி, இஞ்சி, புதினா, ப்ளாக் சால்ட் மற்றும் ப்ளாக் பெப்பர் ஆகியவை சேர்த்து ஜூஸ் தயாரித்தால் இன்னும் ருசியாக இருக்கும்.  தினமும் கேரட் மற்றும் பீட்ரூட் ஜூஸ் குடித்துவந்தால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.  

கேரட் மற்றும் பீட்ரூட்டில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க வல்லது.  உடலில் மெட்டபாலிசத்தை அதிகரித்து மலச்சிக்கலையும் தடுக்கிறது.  இதில் இருக்கக்கூடிய ஃபைட்டோ நியூட்ரியண்ட்ஸ் செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.  கேரட்டில் நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்து, குடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.  பீட்ரூட்டில் நைட்ரேட் இருப்பதால் உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைக்கிறது.  beetroot juice

 

பீட்டா கெரட்டின், வைட்டமின் ஏ போன்ற சத்துக்கள் கேரட் மற்றும் பீட்ரூட்டில் இருப்பதால் கண் பார்வை, மற்றும் வயது முதிர்ச்சி காரணமாக உடலில் ஏற்படும் உபாதைகள் தடுக்கப்படுகிறது.  இரண்டிலும் இரும்புச்சத்தும் அதிகமாக இருப்பதால் இரத்தில் சிவப்பு அணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும்.  இரத்த சோகையை போக்கி, மாதவிடாய் பிரச்னைகளையும் சரி செய்கிறது.  இதில் வைட்டமின் சி சத்து இருப்பதால், சருமத்தின் நிறத்தை அதிகரித்து, பளபளக்கும் மேனியை தருகிறது.  மேலும் கூந்தல் உடைதலை தவிர்த்து உறுதியாக வளர செய்கிறது.   

Listen to the latest songs, only on JioSaavn.com

beetroot

 

இதில் புதினா சேர்க்கப்பட்டிருப்பதால் உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும். கேரட், பீட்ரூட், இஞ்சி, புதினா, மிளகு ஆகியவை சேர்த்து ஜூஸ் தயாரித்து குடிக்கலாம்.   


 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement