கோடை காலத்தில் தேங்காய் பாலை ஏன் குடிக்க வேண்டும்...?

தேங்காய் பாலை பல வகையில் தயாரிக்க முடியும். சருமம் மற்றும் தலை முடியின் பொலிவுக்கும் மிகவும் ஏற்றது. குழம்பு வைக்கவும் பயன்படுத்தலாம், தேங்காய் பாலில் சர்க்கரை சேர்த்துக் குடிக்கலாம்.

   |  Updated: May 09, 2019 14:58 IST

Reddit
Why You Should Drink Coconut Milk This Summer: Easy Recipe To Make It At Home

கோடைக்காலத்திற்கு ஏற்ற பானம் தேங்காய் பால்

Highlights
  • கோடை காலத்தில் வெப்பத்தாக்கு நோய் ஏற்படலாம்.
  • தேங்காய் பால் உடலில் நீர்ச்சத்தை வற்றாமல் வைத்துக் கொள்கிறது.
  • தேங்காய் பாலை லாக்டோஸ் அலர்ஜி உள்ளவர்கள் குடிக்கலாம்.

கோடைக்காலத்தில் வெயிலை சமாளிக்க குளிர்ச்சியான பானங்களே பலரும் விரும்புகின்றனர். தேங்காய் பாலும் உடலின் உஷ்ணத்தை வெகுவாக குறைக்கக் கூடியது. தென்னிந்திய சமையல்களில் தேங்காய் பால் பயன்படுத்தப்படுகிறது. ஃப்ரஷ்ஷான தேங்காயை துருவி வெதுவெதுப்பான நீரை ஊற்றி நன்றாக பிழிந்து எடுத்தால் சுவையான தேங்காய் பாலை தயார் செய்து விட முடியும். இதன் இயற்கையான க்ரீம் போன்ற தன்மையும் இனிப்பும் தேங்காய் பாலில் உண்டு. கோடைகாலத்தில் ஒரு டம்ளர் தேங்காய் பாலை குடித்தால் உங்கள் உடல் வெப்பத்தாக்கத்தினால் பாதிக்கப்படாமல் இருக்கும். உடலில் நீர்ச்சத்து வற்றாமல் இருக்கும்.

பசும் பாலுடன் ஒப்பிடும் போது தேங்காய் பால் அதிகம் வயிறு அடைத்த  உணர்வைக் கொடுக்காது, லைட்டாக இருக்கும். தேங்காய் பாலின் நன்மைகளை தெரிந்து கொண்டால் நிச்சயம் அதை உணவில் சேர்த்துக் கொள்வீர்கள்.

ஊட்டச்சத்து நிபுணர் ஷில்பா அரோரா, “லாக்டோஸ் அலர்ஜி உள்ளவர்களுக்கு மிகவும் ஏற்றது. மூளை மற்றும் உடலுக்கு மிகவும் நல்லது. தேங்காய் பாலில் உள்ள லாரிக் ஆசிட் உள்ளது. இது தாய்ப்பாலில் மட்டுமே இருக்கக் கூடியது. குழந்தை உணவுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. கோடைக்காலத்தில் ஸ்மூத்தி செய்யும் போது பசும் பாலுக்கு பதிலாக தேங்காய் பால் சேர்த்து மாம்பழம் மற்றும் ஸ்ட்ராபெர்ரியுடன் சியா விதைகள் சேர்த்து மிக்ஸியில் அடித்து குடிக்கலாம். உடல் எடை குறைப்புக்கான சரியான பானமாக இருக்கும். coconut milk

தேங்காய் பாலின் நன்மைகள்

1.வெயிலினால் ஏற்படும் வெப்பத் தாக்கம், இதய பிரச்னைகள், சோர்வு, தசை வலி அல்லது கோளாறுகள் மற்றும் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன.

2. உடலில் உள்ள எலெக்ட் ரோலைட்ஸ் சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது.

3. எளிதில் செரிக்கக் கூடியது. லாக்டோஸ் அலர்ஜி உள்ளவர்களும் இதை அருந்தலாம்.

4. தேங்காய் பால் இரத்த அழுத்தத்தை திறம்பட நிர்வகிக்க உதவுகிறது.பொட்டாசியம் மிகவும் அதிகம்.

5. தேங்காய் பாலில் இருக்கு இரும்புச் சத்து இரத்த சோகை நீங்க உதவுகிறது.

6. தேங்காய் பாலில் உள்ள நார்ச்சத்து பசியை வெகுநேரம் தாங்கக்கூடியது. உடல் எடை குறைப்புக்கு மிகவும் உதவுகிறது.

7. தேங்காய் பால் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.

8. உடலில் நீர்ச்சத்து வற்றாமல் இருக்க தேங்காய் பால் மிகவும் உதவுகிறது. ஒரு டம்ளர் தேங்காய் பால் நாள் முழுக்க உடலை நீர்ச்சத்து வற்றாமல் வைத்துக் கொள்ள உதவுகிறது.

9. தேங்காய் பாலில் உள்ள ஊட்டச்சத்து தலை முடிக்கும் சருமத்திற்கும் மிகவும் ஏற்றது.

coconut milkவீட்டில் தேங்காய் தயாரிக்கும் முறை

தேங்காய் பாலை பல வகையில் தயாரிக்க முடியும். சருமம் மற்றும் தலை முடியின் பொலிவுக்கும் மிகவும் ஏற்றது. குழம்பு வைக்கவும் பயன்படுத்தலாம்,  தேங்காய் பாலில் சர்க்கரை சேர்த்துக் குடிக்கலாம். 

தேவையான பொருள்

துருவிய தேங்காய் 

சூடு தண்ணீர்

செய்முறை

1. துருவிய தேங்காயை எடுத்து மிக்ஸியில் போடவும்.

2. சூடான தண்ணீர் சேர்த்து சில நிமிடங்கள் அரைக்கவும் 

3. நைஸாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும் 

4. மஸ்லின் துணியில் அரைத்த கலவையை வைத்து நன்றாக பிழிந்து தேங்காய் பாலை எடுக்கவும். 

5. தேங்காய் பால் முழுவதையும் பிழிந்து எடுத்தபின் மீதமுள்ள சக்கையை தனியே எடுத்து வைத்து தேங்காய் பவுடன் தயாரிக்க முடியும். 

6. தேங்காய் பால் சூடு ஆறியது காற்றுப் புகாத ஜாரில் எடுத்து வைத்து விடவும். 

7. குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பயன்படுத்தினால் 4 நாட்கள் வரை பயன்படுத்த முடியும். Listen to the latest songs, only on JioSaavn.com

Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information.Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement