நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மசாலா பொருட்கள்

குளிர்காலத்தில் தான் நமக்கு அதிகபடியான நோய் எதிர்ப்பு சக்தி தேவைப்படுகிறது

एनडीटीवी फूड डेस्क  |  Updated: December 10, 2018 08:56 IST

Reddit
Winter Immunity: 4 Winter Spices To Relieve Cold And Cough 

குளிர்காலத்தில் தான் நமக்கு அதிகபடியான நோய் எதிர்ப்பு சக்தி தேவைப்படுகிறது. நம் உடலை கதகதப்பாக வைத்து கொள்ளவும், சளி இருமல் மற்றும் காய்ச்சல் போன்றவற்றில் இருந்து நம்மை பாதுகாக்கவும் இயற்கையிலேயே சில மருத்துவ குணம் நிறைந்த மசாலா பொருட்கள் இருக்கின்றன. அவற்றில் ஆண்டிபாக்டீரியல் மற்றும் ஆண்டி இன்ஃப்ளமேட்ரி தன்மை அதிகம் உள்ளதால் உடலில் நோய் தொற்று பாதிப்பு தடுக்கப்படுகிறது.

நோய் எதிர்ப்பு சக்திக்கு இதனை சாப்பிடலாம்

ஏலக்காய்

ஏலக்காய் பச்சை மற்றும் கருப்பு நிறத்தில் கிடைக்கும். இவை இரண்டுமே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியவை. குறிப்பாக கருப்பு நிற ஏலக்காய் சளி, இருமல் மற்றும் நுறையீரல் கோளாறுகளை சரி செய்யக்கூடியவை. இதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது டீ, வெந்நீரில் கலந்து சாப்பிடலாம். ஏலக்காயை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் ஏலக்காய் எண்ணெயை உபயோகித்தால் சருமம் மென்மையாக மாறும்.

5jhhmuag

பட்டை

இந்திய மற்றும் சீன மருத்துவத்தில் முக்கிய பெற்றது இந்த பட்டை. இவற்றை உணவில் சேர்த்து கொண்டால் நீரிழிவு நோய் மற்றும் உடல் எடை குறையும். மேலும் சளி, தொண்டை கரகரப்பு ஆகியவற்றை குணமாக்கும். இதில் ஆண்டிஆக்ஸிடண்ட், ஆண்டிவைரல், ஆண்டிபாக்டீரியல் மற்றும் ஆண்டிஃபங்கல் தன்மை நிறைந்துள்ளது. வெந்நீரில் பட்டை துண்டு சேர்த்து நாள் ஒன்றுக்கு மூன்று முறை குடித்து வந்தால் சளி மற்றும் தொண்டை கரகரப்பு சரியாகும்.

மிளகு

மிளகில் வைட்டமின் சி, ஃப்ளேவனாய்டு, ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் ஆண்டிபாக்டீரியல் தன்மை நிறைந்துள்ளது. தினமும் காலையில் மிளகு டீ வைத்து அதில் தேன் கலந்து குடித்து வந்தால் தொண்டை பிரச்சனை சரியாகும்.

js9fsvj

கிராம்பு

சைனஸ், சளி, காய்ச்சல், இருமல், தொண்டை கரகரப்பு ஆகியவற்றை சரிசெய்யக் கூடியது கிராம்பு. இதில் ஆண்டி இன்ஃப்ளமேட்ரி தன்மை அடங்கியிருக்கிறது. தினமும் காலையில் கிராம்பை அப்படியே சாப்பிடலாம் அல்லது பாலில் சேர்த்து குடித்து வரலாம். மூக்கடைப்பிற்கு சிறந்தது கிராம்பு எண்ணெய். கிராம்பு எண்ணெயில் குளிர்ச்சி தன்மை அதிகம் இருப்பதால் இதனை பயன்படுத்தலாம்.

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Advertisement