குளிர்காலம் தொடங்குகிறது - நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் உணவுகள்

குளிர்ச்சியான காலநிலை பல நோய்களை உண்டாக்கும். அதற்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது அவசியம்.

एनडीटीवी फूड डेस्क  |  Updated: October 15, 2018 14:01 IST

Reddit
Winter Is Coming: Boost Your Immunity With These 6 Magical Foods

காலநிலை மாறுகிறது. ஸ்வெட்டர் தேவைப்படும் குளிர்காலம் வந்துவிட்டது. இனி சூடான சூப்பும், ஹாட் சாக்லெட்டும் பலரின் அபிமான உணவுகளாக மாறிவிடும். ஃப்ளூ போன்ற பல வகையான காய்ச்சல்கள் தக்கும் அபாயம் உள்ளது. அதனால் நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். அதற்கு நாம் சாப்பிடும் உணவில் சிலவற்றை மறக்காமல் சேர்த்துக் கொள்ள வேண்டும். அவை என்னென்ன என்பதைப் பார்ப்போம்.

1. இஞ்சி - குளிர்காலத்தில் டீ, சூப் என அனைத்திலும் அவசியம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு பொருள். இது நமது நோயெதிர்ப்பு சக்தியை வேகமாக அதிகரிக்கும்.

2. பூண்டு - வாசனையுடன் சேர்த்து நோயெதிர்ப்பு சக்தியை தூண்டும் அல்லிசின் என்ற மூலக்கூறும் அதிகம் உள்ளது.

3. சிட்ரஸ் - விட்டமின் சி அதிகமிருக்கும் எலுமிச்சை, ஆரஞ்ச், சாத்துக்குடி போன்றவை.

4. கீரைகள் - பசலை, பரட்டை மற்றும் வெந்தயக்கீரை ஆகியவற்றில் குறைந்த கலோரியும், அதிக ஆன்டி ஆக்ஸிடென்டும், பீட்டா கரோட்டினும் விட்டமின் சி-யும் நிறைந்துள்ளன. இவைகள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியவை.

Listen to the latest songs, only on JioSaavn.com

5. காளான் - செலினியம், நியாசின், ரைபோஃப்ளேவின் ஆகிய மூலக்கூறுகளை கொண்டிருக்கும் காளான் குளிர்காலத்திற்கு உகந்தது.

6. மஞ்சள் - இந்த முக்கியமான சமையல் பொருளை நாம் சாப்பிடும் அனைத்து உணவுகளிலும் முடிந்தளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
 

Comments

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement