நிரிழிவு நோய்க்கு ஏற்ற காலை உணவு வகைகள்

நீரிழிவு நோயினால் பாதிப்படைந்தவர்கள், காலை உணவை மிக கவனமாகவும் ஆரோக்கியமாகவும் எடுத்து கொள்ள வேண்டும்

Sushmita Sengupta  |  Updated: June 28, 2018 18:39 IST

Reddit
World Diabetes Day: 5 Diabetic Friendly Breakfast ideas
Highlights
  • நீரிழிவு நோய் பாதிப்பு மிகவும் பரவலாக காணப்படுகிறது
  • இதனால் வாழ்க்கை முறையே பாதிக்கப்படும்
  • சரியான உணவு முறை மூலம் இதனை கட்டுப்படுத்தலாம்

ஊட்டச்சத்து நிபுணர் சில்பா அரோரா பரிந்துரைத்த உணவுகளின் தொகுப்பு இதோ... நீரிழிவு என்பது உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருப்பது ஆகும். இன்சுலின் ஹார்மோன்களால் ஏற்படும் மாற்றங்களினால், உடலில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் அசாதாரண நிலையை அடையும் போது, இரத்த சர்க்கரை அளவு அதிகமாகும். மரபணு காரணங்களினால், பழக்க வழக்கங்களினால் நீரிழிவு நோய் வர காரணமாக உள்ளது.

நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், உடல் பருமன் அதிகமாகும் ஆபத்தினாலும், மாரடைப்பு, பக்கவாதம் ஆகிய நோயினாலும் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உண்டு. தாமதமான சிகிச்சை, நீரிழிவு குறித்த குறைந்த விழிப்புணர்வு ஆகியவையால், உடல் மேலும் மோசமடையும். உணவு பழக்க வழக்கங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு பெரும் பங்காற்றுகிறது. குறிப்பாக, நீரிழிவு நோயால் பாதிபக்கப்பட்டவர்கள் நீண்ட நேரம் உணவு உண்ணாது இருக்க கூடாது. ஏனெனில், இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு. சிறந்த ஆரோக்கியமான காலை உணவு, அனைவருக்கும் மிக முக்கியமானது.

நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியவை:

தினசரியின், காலை உணவு ஒரு மனிதனுக்கு மிக முக்கியமானதாக உள்ளது. ஏனெனில், காலை உணவின் அளவை மற்றும் ஆரோக்கியத்தைப் பொறுத்தே, அந்த நாள் முழுவதிற்கான ஆற்றல் கிடைக்கிறது என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நீரிழிவு நோயினால் பாதிப்படைந்தவர்கள், காலை உணவை மிக கவனமாகவும் ஆரோக்கியமாகவும் எடுத்து கொள்ள வேண்டும்.பெங்களூரைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் சாலினி மங்ளானி கூறுவதாவது, "நீரிழிவினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் காலை உணவில் புரதச்சத்து நிறைந்த காய்கறி உணவுகளையும், கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளையும் எடுத்து கொள்ள வேண்டும். உதாரணமாக, இரண்டு கப் அளவு உப்மா அல்லது அவல் எடுத்து கொள்வதற்கு பதிலாக, அரை கப் அளவு உப்மா அல்லது அவல், மற்றும் அரை கப் அளவு பயிர்களுடன் சிறிது தயிர் சேர்த்து கொள்ளலாம். இரண்டு ரொட்டி சாப்பிடுவதற்கு பதிலாக, ஒரு ரொட்டியுடன் ஒரு முட்டை மற்றும் பச்சை காய்கறிகள் சிறிதளவு எடுத்து கொள்ளலாம்.

பாசிப் பருப்பு

பாசிப்பருப்பு வகைகள் அதிக புரதச்சத்து உடையது. பாசிப்பருப்பு கலந்த உணவுகள் செரிமானம் ஆவதற்கு நேரம் எடுக்கும். எனவே, காலை உணவிற்கு பாசிப்பருப்பு எடுத்துக்கொண்டால் இரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும்.

chila new

முட்டை

முட்டையில், புரதச்சத்து அதிகம் நிறைந்தது இருக்கும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களது உணவில் முட்டை எடுத்துக் கொள்வது நல்லது. வேகவைத்து, அல்லது முட்டை பொரியல் செய்து காலை உணவின் போது எடுத்துக் கொண்டால், ஆரோக்கியமானது.

scrambled eggs with chicken sausages

காய்கறிகளுடன் அவல்

சிவப்பு அவலுடன் சேர்த்து காய்கறிகள் கொண்டு சமைக்கப்படும் உணவு, சாப்பிடுவதற்கு எளிதாக இருப்பது மட்டுமின்றி, அதிக நார் சத்து நிறைந்ததாகவும் காணப்படுகிறது. நார் சத்து அதிகம் இருக்க கூடிய உணவுகள், பசி தாங்குவது மட்டுமின்றி, எளிதில் இனிப்பு அல்லது பிற உணவு வகைகளை தேடி போவதை சிறிது நேரத்திற்கு கட்டுப்படுத்தும்.

poha

வெந்தய சப்பாத்தி

வெந்தயம் சேர்த்து சப்பாத்தி செய்தால், அதில் நார் சத்து அதிகம் இருப்பது மட்டுமின்றி, ஆரோக்கியமான காலை உணவாக அமைகிறது. சமையல் எண்ணெய் உபயோகித்து சப்பாத்தி செய்ய வேண்டும், சந்தையில் இருக்கும் ஆரோக்கியமற்ற சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை தவிர்க்கவும்.

methi paratha

முளை பயிர்கள்

Commentsபயிர்கள் அதிகம் புரதச்சத்து மற்றும் நார் சத்து நிறைந்தவை. இவை இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க உதவும். வெள்ளரிக்காய், தக்காளி, சிறிதளவு உப்பு, ஒரு தேக்கரண்டி எலுமிச்சம்பழ சாறு, பயிர்கள் ஆகியவற்றை கலந்து உணடால், இதை விடவும் ஆரோக்கியமான உணவு வேறென்ன இருக்க முடியும்?

sprouts

 


 

About Sushmita SenguptaSharing a strong penchant for food, Sushmita loves all things good, cheesy and greasy. Her other favourite pastime activities other than discussing food includes, reading, watching movies and binge-watching TV shows.

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement