ஆரோக்கியமான சிறுநீரகத்துக்கு இந்த 7 உணவுகளை சாப்பிடுங்க!

ஆரோக்கியமாகச் சாப்பிடும்போது, சிறுநீரகத்துக்கு நாம் அதிகம் கவனம் செலுத்தத் தவறி விடுகிறோம். ஆனால் உங்கள் உணவில் இந்த எளிய உணவுகளைச் சேர்த்து உண்ணும் போது, சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.

Aditi Ahuja  |  Updated: March 17, 2020 15:24 IST

Reddit
7 Foods To Eat For A Healthy Kidney

சிறுநீரக ஆரோக்கியத்துக்கு இந்த எளிய உணவுகளை சாப்பிடலாம்.

ஆரோக்கியமாகச் சாப்பிடும்போது, சிறுநீரகத்துக்கு நாம் அதிகம் கவனம் செலுத்தத் தவறி விடுகிறோம். ஆனால் உங்கள் உணவில் இந்த எளிய உணவுகளைச் சேர்த்து உண்ணும் போது, சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். வீட்டிலேயே கிடைக்கக் கூடிய எளிய மற்றும் தினந்தோறும் சாப்பிடும் உணவில் கவனம் செலுத்தலாம். இந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்ப்பது சிறுநீரக நோயைத் தவிர்ப்பதற்கான ஒரு தடுப்பு நடவடிக்கையாகச் செயல்படுகிறது.

சோடியம் உட்கொள்வதை முடிந்தவரைத் தவிர்க்க வேண்டும் என்று மேக்ரோபயாடிக் சுகாதார பயிற்சியாளர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் ஷில்பா அரோரா கூறுகிறார். “உணவில் உப்பு அதிகம் சேர்ப்பதை மட்டுப்படுத்தப்பட வேண்டும். பதப்படுத்தப்பட்ட பொருட்களில், சோடியம் மற்றும் டிரான்ஸ் கொழுப்புகளில் அதிகமாக இருப்பதால், அவற்றைக்  குறைத்துக் கொள்ள வேண்டும்.” மேலும், ஆரோக்கியமற்ற சிறுநீரகங்களுக்கு பாஸ்பரஸை qபில்ட்டர் செய்வதில் சிக்கல் உள்ளது, எனவே சிறுநீரக ஆரோக்கியமான உணவுக்கு இந்த தாதுப்பொருளின் குறைந்த அளவு பயன்படுத்தப் பரிந்துரைக்கப்படுகிறது.

சிறுநீரக ஆரோக்கியத்துக்கு ஏற்ற 7 உணவுகள்:

1. ஆப்பிள்

 எப்போதும் ஆரோக்கியம் அளிக்கக் கூடியது ஆப்பிள். மேலும், சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் ஆப்பிள்கள் உதவும். ஆப்பிள்களில் இருக்கும் அதிக பெக்டின், சிறுநீரக பாதிப்புடன் தொடர்புடைய ஆபத்து காரணிகளைக் குறைக்க உதவுகிறது.

2. பெர்ரி

பெர்ரி ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் பெற்றவையாக உள்ளது. ஸ்ட்ராபெர்ரி, ஃப்ளூபெர்ரி, கிரான்பெர்ரி போன்ற பழங்களை, சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

3. சிட்ரஸ் பழங்கள்

உங்கள் சிறுநீரகத்தை ஆரோகியமாக் வைத்திருக்க வைட்டமின் சி அதிகம் உடலில் இருக்க வேண்டும். ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் அதிகப்படியான வைட்டமின்கள் உள்ளன. டிகே பதிப்பகம் வெளியிட்ட ஹீலிங் ஃபுட்ஸ் என்ற புத்தகத்தில், “தினமும் எலுமிச்சை சாற்றை உட்கொள்வது கல் உருவாவதற்கான விகிதத்தைக் குறைப்பதாகக் காட்டப்பட்டுள்ளது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

citrus fruits 
4. முட்டைகோஸ்

முட்டைக்கோசு இயற்கையாகவே சோடியம் குறைவாக உள்ளது, இது சிறுநீரக நோயைத் தடுக்க ஒரு சிறந்த காய்கறியாக அமைகிறது. ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு இது பல பயனுள்ள கலவைகள் மற்றும் வைட்டமின்களையும் கொண்டுள்ளது. முட்டைக்கோசு சாப்பிடுவதற்கான சிறந்த வழி, அதை லேசாகச் சமைத்து, அதன் ஆரோக்கிய நன்மைகளைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள்.

5. சர்க்கரை வள்ளிக் கிழங்கு

சர்க்கரை வள்ளிக் கிழங்கில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுகளின் அளவு நாளின் எந்த நேரத்திலும் சாப்பிடுவதற்குச் சிறந்தது. அவற்றின் அதிக நார்ச்சத்து உள்ளடக்கம் மெதுவாக உடைந்து, எடையும் குறைக்க ஏற்றதாக அமைகிறது.

6. கீரை வகைகள்

கீரை வகைகள் சிறுநீரக ஆரோக்கியத்துக்காக உங்கள் உணவில் சேர்க்கப்பட வேண்டும். கீரை அத்தகைய ஒரு சிறந்த உணவாகும் ஆகும், இது உடனடியாகக் கிடைக்கக்கூடியது மற்றும் அதன் உயர் வைட்டமின் மற்றும் தாதுப்பொருட்களுக்காக உணவில் சேர்க்கலாம்.

67uatgpg

7. காலிஃப்ளவர்

காலிஃப்ளவரில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. சிறுநீரகத்திற்கான அதிகபட்ச சுகாதார நலன்களுக்காக இது வேகவைக்கலாம் அல்லது பச்சையாகச் சாப்பிடலாம். ஊட்டச்சத்து நிபுணர் ஷில்பா அரோரா கூறுகையில், நீர் நிறைந்த உணவை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்றார். சிறுநீரக பிரச்னைகளை போக்குவதில் இளநீருக்கும் அதிகப்படியான பங்கு உள்ளது.

ஆரோக்கியமான டிடாக்ஸ் நீருக்கான ஊட்டச்சத்து நிபுணர் பரிந்துரைக்கப்பட்ட செய்முறை

ஊட்டச்சத்து நிபுணர் ஷில்பா அரோரா என்.டி கூறிய, வீட்டில் எளிதாகத் தயாரிக்கக்கூடிய டிடாக்ஸ் தண்ணீருக்கான எளிய செய்முறை இங்கே.

தேவையான பொருட்கள்:

வெள்ளரிக்காய் - 2
எலுமிச்சை - 1/2
புதினா இலைகள் 
சிறிதளவு கருப்பு உப்பு

Listen to the latest songs, only on JioSaavn.com

செய்முறை:

அனைத்துப் பொருட்களையும் மிச்ஸியில் அரைத்து, முடிந்த அளவு குடிக்கவும்.

Comments

About Aditi AhujaAditi loves talking to and meeting like-minded foodies (especially the kind who like veg momos). Plus points if you get her bad jokes and sitcom references, or if you recommend a new place to eat at.

உணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
சமீபத்திய கட்டுரைகள்
Advertisement